Tagged: படத்திறப்பு விழா

தோழர் முனியாண்டி படத்திறப்பு விழாவில் அவரின் இணையர் உருக்கமான பேச்சு

“இனி யார்கிட்ட சண்ட போடப்பேறன்னு தெரியலையே…” “எங்களுக்கு சுயமரியாதை திருமணம்தான் நடந்திச்சி. இதுநாள் வரைக்கும் எங்களுக்குள்ள சண்ட வந்ததே இல்ல. இங்க பேசின எல்லோரும் சொன்னா மதிரி எங்க வீட்டுக்காரருக்கு கோவம் வரவே வராது. நான் வேணும்னே சண்டக்கி போவேன். அப்ப கூட அவரு சிரிச்சிகிட்டே போயிடுவாரு. இனி நான் சண்ட போடறதுக்கூட ஆள் இல்லையே. இங்க எல்லா தோழர்களும் சேர்ந்து கொடுத்த பணத்தை வாங்கியத நினச்சா எனக்கு ஒடம்பே கூசுது. யாரும் தப்பா நினைச்சிக்க வேணாம். எனக்கு சுயமரியாதையையும், தன்னம்பிக்கையும் பெரியார் கத்துக்கொடுத்ததாலதான் அந்த பணம் வாங்குவதற்கு எனக்கு ஒரு மாதிரியா இருக்குது. உடனே என் பையன்கிட்ட அத கொடுத்தா அவனும் பெரியாரையும், அம்பேத்கரையும் படிச்சதால வேணாம்னு சொல்லிட்டான். திலீபன் தோழர் கிட்ட சொல்லி இந்த பணத்தை இயக்க செலவுக்கு வெச்சிக்கோங்கனு சொன்னேன். அவரும் வாங்காததால எனக்கு இதுவரைக்கும் ஒரு மாதிரியா இருக்குது. என்னுடைய கணவர் இறந்த பிறகு ஊர் ஆளுங்ககிட்ட...

தோழர் க.முனியாண்டி அவர்களின் படத் திறப்பு ! நெமிலி 25032017

தோழர் க.முனியாண்டி அவர்களின் படத் திறப்பு ! நெமிலியில் தோழர் ஃபாரூக் நினைவரங்கில். நாள் : 25.03.2017. சனிக்கிழமை . நேரம் : காலை 11.00 மணி. இடம்: தனபாக்கியம் வேணுகோபால் திருமண மண்டபம்,நெமிலி. படத்திறப்பாளர்: தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

கோபி நகர தோழர் நாகப்பன் படத்திறப்பு 30012017

கோபி நகர தோழர் நாகப்பன் படத்திறப்பு 30012017

கடந்த 12.01.2017 அன்று மறைந்த கோபி நகர கழகத்தலைவர் தோழர் நாகப்பன் அவர்களின் படத்திறப்பு 30.01.2017 அன்று கொளப்பலூரில் நடைபெற்றது படத்திறப்பு நிகழ்விற்கு மாநில வெளியீட்டு செயலாளர் தோழர் இராம இளங்கோவன் அவர்கள் தலைமை தாங்கினார் மாநில அமைப்பு செயலாளர் தோழர் இரத்தினசாமி, மாநில பொருளாளர் தோழர் துரைசாமி ஆகியோர் தோழர் நாகப்பன் அவர்களின் படத்தை திறந்து வைத்தனர் படத்திறப்பு நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் தோழர் சிவகாமி தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் குணசேகரன் திராவிடர் கழக தோழர் யோகானந்தம் மணிமொழி மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர். செய்தி ம. நிவாசு

காவி இருளில் முழ்கி கிடக்கும் மக்களை,பகுத்தறிவு பாடல்கள் மூலம் மீட்க வேண்டும்”- மக்கள் பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் தாயார் படத்திறப்பில் தோழர் அரங்ககுணசேகரன் பேச்சு.

”காவி இருளில் முழ்கி கிடக்கும் மக்களை,பகுத்தறிவு பாடல்கள் மூலம் மீட்க வேண்டும்”- மக்கள் பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் தாயார் படத்திறப்பில் தோழர் அரங்ககுணசேகரன் பேச்சு. பேராவூரணி மே. 6 திராவிடர் விடுதலைக்கழக பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் மறைவுற்ற தாயார் சின்னப்பிள்ளை அவர்களின் படத்திறப்பு விழா நிகழ்ச்சி திராவிடர் கழக மாவட்ட துணைத்தலைவர் அரு.நல்லதம்பி தலைமையில் பள்ளத்தூரில் நடைபெற்றது. தோழர் சின்னபிள்ளையின் படத்தினை பெரியார் பெருந்தொண்டர் அழகிய நாயகிபுரம் தோழர் ப.அ.வைத்தியலிங்கம் திறந்து வைத்தார். தோழர் சின்னப்பிள்ளையின் தொண்டினை நினைவு கூர்ந்து, சத்துணவு ஊழியர்சங்க மாவட்ட தலைவர் மனோகரன், ஆசிரியர் வீரமணி, தமாகா நிர்வாகி வை.ராகவன்,விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி முருகேசன், விடுதலை தமிழபுலிகள் கட்சியின் பொறுப்பாளர் பசுபதி, கூத்தலிங்கம் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஆத்மநாதன், திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் செல்வராஜ்,திராவிடர் விடுதலைக்கழக தஞ்சை மாவட்ட முன்னாள் அமைப்பாளர் கு.பாரி,மெய்சுடர் இதழ் ஆசிரியர் வெங்கடேசன், இசிஐ திருச்சபை ஆயர் ஜேம்ஸ், தமிழக...