காவி இருளில் முழ்கி கிடக்கும் மக்களை,பகுத்தறிவு பாடல்கள் மூலம் மீட்க வேண்டும்”- மக்கள் பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் தாயார் படத்திறப்பில் தோழர் அரங்ககுணசேகரன் பேச்சு.
”காவி இருளில் முழ்கி கிடக்கும் மக்களை,பகுத்தறிவு பாடல்கள் மூலம் மீட்க வேண்டும்”- மக்கள் பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் தாயார் படத்திறப்பில் தோழர் அரங்ககுணசேகரன் பேச்சு.
பேராவூரணி மே. 6 திராவிடர் விடுதலைக்கழக பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் மறைவுற்ற தாயார் சின்னப்பிள்ளை அவர்களின் படத்திறப்பு விழா நிகழ்ச்சி திராவிடர் கழக மாவட்ட துணைத்தலைவர் அரு.நல்லதம்பி தலைமையில் பள்ளத்தூரில் நடைபெற்றது. தோழர் சின்னபிள்ளையின் படத்தினை பெரியார் பெருந்தொண்டர் அழகிய நாயகிபுரம் தோழர் ப.அ.வைத்தியலிங்கம் திறந்து வைத்தார்.
தோழர் சின்னப்பிள்ளையின் தொண்டினை நினைவு கூர்ந்து, சத்துணவு ஊழியர்சங்க மாவட்ட தலைவர் மனோகரன், ஆசிரியர் வீரமணி, தமாகா நிர்வாகி வை.ராகவன்,விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி முருகேசன், விடுதலை தமிழபுலிகள் கட்சியின் பொறுப்பாளர் பசுபதி, கூத்தலிங்கம் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஆத்மநாதன், திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் செல்வராஜ்,திராவிடர் விடுதலைக்கழக தஞ்சை மாவட்ட முன்னாள் அமைப்பாளர் கு.பாரி,மெய்சுடர் இதழ் ஆசிரியர் வெங்கடேசன், இசிஐ திருச்சபை ஆயர் ஜேம்ஸ், தமிழக மக்கள் புரட்சி கழக கொள்கை பரப்பு செயலாளர் ஆறு.நீலகண்டன், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி பொன்முருகு தமிழ்வேந்தன், திராவிடர் விடுதலைக்கழக மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு ரெத்தினசாமி, மாநில பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால்பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக தமிழக மக்கள் புரட்சிக்கழக பொதுச்செயலாளர் தோழர் அரங்க குணசேகரன் சிறப்புரையாற்றினார், அவர் தனது உரையில், ”பெரியாரின் கொள்கைகளை எளிமையான முறையில் சொந்தமாக பாட்டெழுதி,தானே மெட்டமைத்து தானே இசையமைத்து, தமிழகம் முழுவதும்,கிராமப்புற மக்களிடம், கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் மக்கள் பாடகர் தோழர் பள்ளத்தூர் நாவலரசன் ஆவார். அவரை ஈன்ரெடுத்த தாயார் சின்னப்பிள்ளை அவர்கள் இன்றைக்கு நம்மிடம் இல்லை, அவரை இழந்து தவிக்கின்ற நாவலரசன் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.நாடு இன்றைக்கு மிகப்பெரிய நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கின்றது.பார்பனர் அல்லாத ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது இந்துத்துவா கொண்களை திணித்து அவர்களை சாதியின் பெயரால் பிரித்துவைத்து அவர்களிடையே கலவரத்தை தூண்டும் பணியினை பாஜக மற்றும் சங்பரிவாரங்கள் செய்து வருகின்றன.
இவற்றை முறியடிக்க பெரியார் மற்றும் அம்பேத்கர் கொள்கைகளை நாம் உயர்த்தி பிடித்து பிரச்சாரங்கள் மூலமாகவும், பாடல்கள் மூலமாகவும் எளிய மக்களிடம் எடுத்துசெல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கல்வியில் கூட இந்த ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கின்றது. மருத்துவ படிப்பிற்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் என்கிறது, உச்சிகுடுமி மன்றமான உச்சநீதிமன்றம், நுழைவுத்தேர்வு என்பது அடித்தட்டு கிராமப்பு ஏழை எளிய மக்களின் உரிமையை நசுக்குகின்ற முயற்சியாகும் இதன் பின்னணியில் மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்படுகிறது. எனவே காவி பயங்கரவாதத்தை முறியடிக்க காவி இருளில் முழ்கிகிடக்கும் மக்களை மீட்டெடுக்க பெரியார் அம்பேத்கர் கொள்கைகளை பாடல்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்கின்ற முயற்சியினை தோழர் நாவலசன் செய்யவேண்டும்” என கூறினார்.
முடிவில் பள்ளத்தூர் நாவலரசன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித திருவேங்கடம், சூலூர் பன்னீர்செல்வம், திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, கோட்டூர் ஒன்றிய செயலாளர் தென்பரை பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமான திராவிடர் விடுதலைக்கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தி : மன்னை இரா.காளிதாசு.