Tagged: தீண்டாமை ஒழிப்பு மாநில அலுவலகம்

செயல்படாத தீண்டாமை ஒழிப்பு பிரிவை முற்றுகையிட வாரீர்

செயல்படாத தீண்டாமை ஒழிப்பு பிரிவை முற்றுகையிட வாரீர்

ஜாதி வெறிக்கு எதிராக தொடர்ந்து சமரசமின்றி போராடிவரும் திராவிடர் விடுதலைக் கழகம் களத்தில் பல இன்னல்கள் இழப்புகளை சந்தித்து சிறிதும் தொய்வின்றி தொடர்ந்து துணிவுடன் போராடிவருகிறது. உடுமலையில் நடைபெற்ற ஜாதிவெறிப்படுகொலை தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. இது போன்ற ஜாதிய வன்கொடுமைகளை தடுப்பதற்க்காகவே காவல்துறையில் தீண்டாமை ஒழிப்புப்பிரிவு என்றொரு தனிப்பிரிவு இயங்கிக் கொண்டிருக்கிறது. தனிப் பிரிவாக செயல்படவேண்டி உருவாக்கப்பட்ட இந்த பிரிவு செயல்பாடுகள் இன்றி,தங்கள் கடமைகளை செய்யாமல் கோமா நிலையில் கிடக்கிறது. ஜாதி வெறிப்படுகொலைகளை தடுக்க அரசு எந்த முயற்சிகளையும் எடுக்காத நிலையில் தமிழக அரசின் காவல்துறையில் உள்ள தீண்டாமை ஒழிப்பு பிரிவு அலுவலகங்களை நாளை 16.03.2016 அன்று காலை திராவிடர் விடுதலைக் கழகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறது. சென்னையில் கழக பொதுச்செயலாளர் ”தோழர் விடுதலை ராஜேந்திரன்” தலைமையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள மாநில தீண்டாமை ஒழிப்பு பிரிவு தலைமை அலுவகமும், திருப்பூரில் கழக தலைவர் ”தோழர் கொளத்தூர் மணி”...

தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகை போராட்டம்!

தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகை போராட்டம்!

முற்றுகைப் போராட்டம்! காவல்துறையின் தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில். உடுமலை சங்கர் அவர்களை ஜாதி வெறியர்கள் ஆணவப் படுகொலை செய்ததை கண்டித்தும், தொடர்ந்து நடைபெறும் ஜாதி ஆணவ படுகொலைகளை தடுக்கத் தவறும் செயல்படாத காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவை கண்டித்தும், ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க கடுமையான தனிச் சட்டம் இயற்றக்கோரியும் முற்றுகைப் போராட்டம். நாள் : 16.03.2016.புதன் கிழமை காலை 10 மணி. இடம்: காவல்துறை இயக்குனர் (I.G.) அலுவலக வளாகத்தில் உள்ள தீண்டாமை ஒழிப்பு பிரிவு அலுவலகம்,மயிலாப்பூர், சென்னை. தொடர்புக்கு: தோழர் உமாபதி, செல் : 7299230363 சென்னை மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். ஜாதி வெறி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக அணிதிரள்வோம் வாருங்கள்.