Tagged: திவிக

சென்னை மாநகர காவல்துறை ராஜாவை விஞ்சிய ராஜவிசுவாசியா? திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை

பூணூலை அறுத்ததாக குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவித்தது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் தந்தைபெரியார் படத்தைக் கொளுத்தியும் ஆபாசமாக பேசியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம், வீதி மன்றத்தை நாடும் திராவிடர் கழகம்! சென்னையில் பூணூல் அறுத்ததாகக் கூறி திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த ஆறு பேர்களைக் குண்டர் சட்டத்தின்கீழ் அடைத்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது வரவேற்கத்தக்கது; அதே நேரத்தில் மத்திய-மாநில அரசுகளால் கவுரவிக்கப்பட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் படத்தை எரித்தும், ஆபாசமாகப் பேசியும் செயல்பட்ட பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் மீதும், அவரைச் சார்ந்தவர் மீதும், புகார் செய்தும், சென்னை மாநகர காவல் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? உடனடியாக எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை யும், வீதி மன்றத்தையும் அணுகி திராவிடர் கழகம் செயல்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, 10.10.2015 அன்று விடுத்துள்ளஅறிக்கை...

‘ஜாதியற்ற சமூகத்தை உருவாக்குவதுதான் பெரியாரின் லட்சிய நோக்கமாக இருந்தது’ தந்தை பெரியார் 137வது பிறந்தநாள் கருத்தரங்கில் மன்னார்குடியில் தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் பேச்சு

20.09.2015 அன்று திராவிடர் விடுதலைக்கழகம், அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் மற்றும் தஞ்சை பசு.கௌதமன் எழுதிய இந்து மதத்தில் அம்பேத்கரும் பெரியாரும் என்ற புத்தகத்தின் நூல் திறனாய்வு மன்னார்குடி சிட்டி ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமை வகித்தார். நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் செந்தமிழன் வரவேற்றார். தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், முன்னாள் அமைப்பாளர் பாரி, புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் பூபதி கார்த்திகேயன், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முரளி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கத்தில், இந்துத்துவ மதவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பகுதிதறிவு எழுத்தாளர்கள் நரேந்திரதபோல்கர், பேராசிரியர் கல்பர்கி ஆகியோரின் படத்தினை திறந்து வைத்து அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார், திருவாரூர் நகர் மன்ற உறுப்பினர் வரதராஜன் ஆகியோர் உரையாற்றினர். அதனை தொடர்ந்த தஞ்சை பசுகௌதமன் எழுதிய இந்து...