Tagged: திருவாரூர் திவிக

காவிரி உரிமை: மன்னையில் கண்டன கூட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என அறிவித்துள்ள மத்திய அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் மன்னார்குடியில்  திராவிடர் விடுதலைக் கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார்  தலைமையில் நடைபெற்றது. மதிமுக மாநில பேச்சாளர் தஞ்சை விடுதலைவேந்தன், காவிரிப் பிரச்சினையில் பா.ஜ.க.வின் துரோகங்களை விளக்கிப் பேசினார். பெரியார் முழக்கம 03112016 இதழ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை – மன்னார்குடியில் கண்டன பொதுக்கூட்டம்

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை வாக்கு அரசியலுக்காக தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது” மன்னார்குடியில் மதிமுக மாநில பேச்சாளர் தஞ்சை விடுதலைவேந்தன் பேச்சு! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என அறிவித்துள்ள மத்திய அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் மன்னார்குடியில் திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார்தலைமையில் நடைபெற்றது. சிறப்புரையாற்றிய மதிமுக மாநில பேச்சாளர் தஞ்சை விடுதலைவேந்தன் பேசியபோது, ‘இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த எந்தஒரு மத்திய அரசும், ஒரு மாநிலத்திற்கெதிராக வெளிப்படையாக செயல்பட்டதில்லை ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு மட்டும் தான் காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க உத்திரவிட்டும், அத்தீர்ப்பினை மதிக்காமல் கர்நாடத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அங்கு பாஜக ஆட்சியை பிடிக்க...

கண்டனக்கூட்டம் ! மன்னார்குடி 08102016

கண்டனக்கூட்டம் ! காவிரியில் தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவின் மோடி அரசைக் கண்டித்து. திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்….. நாள் : 08.10.2016 அன்று மாலை 6மணியளவில் இடம் : பந்தலடி கீழ்புறம்,மன்னார்குடி. சிறப்புரை : தோழர்.தஞ்சை விடுதலைவேந்தன், (மதிமுக தலைமை கழக பேச்சாளர்)

காவிரியில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய,கர்நாடக அரசுகளை கண்டித்தும்.. தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவும்

காவிரியில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய,கர்நாடக அரசுகளை கண்டித்தும்.. தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவும்

திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பிரச்சார கூட்டம். 17.09.2016 மாலை 6மணிக்கு பெரியார் சிலை அருகில் மன்னார்குடி தலைமை : இரா.காளிதாசு மாவட்டசெயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம். சேரன்குளம் சு.செந்தில்குமார் செயலாளர் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் …………………………………………………… சிறப்புரை ………………… தஞ்சை விடுதலைவேந்தன் சாக்கோட்டை இளங்கோவன் தலைமை கழக பேச்சாளர் திராவிடர் விடுதலைக் கழகம்… ………………………………………………………… திராவிடர் விடுதலைக் கழகம் திருவாரூர் மாவட்டம்

தோழர் செங்கொடி 5 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்

மன்னார்குடி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 28.08.2016 மாலை 6 மணிக்கு பெரியார் சிலை அருகில் தோழர் செங்கொடியின் 5ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெறும் தலைமை  இரா.காளிதாசு, மாவட்டச்செயலாளர் சிறப்புரை சேரன்குளம் செந்தில்குமார் செயலாளர் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் நிகழ்ச்சி ஏற்பாடு திராவிடர் விடுதலைக் கழகம் திருவாரூர் மாவட்டம்

நம்புங்கள் அறிவியலை… நம்பாதீங்க சாமியார்களை….பொதுக்கூட்டம் மன்னார்குடி 08082016

திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் .கொளத்தூர்மணி அவர்கள் தலைமையில்… திருவாரூர் மாவட்டதில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் நம்புங்கள் அறிவியலை… நம்பாதீங்க சாமியார்களை…. அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணம்!… 08.08.2016 மாலை 5மணிக்கு நீடாமங்கலம் பெரியார் சிலைஅருகில்.. இரவு 7மணிக்கு மன்னார்குடி பந்தலடி கீழ்புறத்தில்… மாபெரும் பொதுக்கூட்டம்…!!  அனைவரும் வாரீர்!

அய்யா அருணாசலம் மறைவு திராவிடர் இயக்கத்திற்கு பேரிழப்பு

‘அய்யா அருணாசலம் மறைவு திராவிடர் இயக்கத்திற்கு பேரிழப்பு’ திருக்கண்ணபுரத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு பேச்சு திருக்கண்ணபுரம் மே. 25 பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் தமிழ் இசை மன்றம், தமிழ் சான்றோர் பேரவை நிறுவனருமான அய்யா அருணாசலம் அவர்கள் நேற்று முன்தினம் சென்னையில் இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் நடைபெற்றது. அய்யா அருணாசலம் அவர்களின் இறுதி நிகழ்வில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் தலைமைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் இளையராஜா, நாகை மாவட்ட செயலாளர் தெ.மகேசு, மாவட்ட அமைப்பாளர் அன்பரசன், மாவட்ட பொருளாளர் விஜயராகவன், திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, திருச்சி மாவட்ட அமைப்பாளர் குணா, மயிலாடுதுறை நகர தலைவர் நாஞ்சில் சங்கர் ஆகியோர் பங்கேற்று இறுதி மரியாதை செய்தனர். பின்னர் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு பேசுகையில்...

மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சி மன்னார்குடி 27112015

திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சி மன்னார்குடி நடைபெற்றது. மன்னார்குடி நவ 27 இளமை சுகங்களை எல்லாம் துறந்து விட்டு, எதிர்கால சந்ததிகளுக்காக தம் நிகழ்காலத்தைப் பணயம் வைத்துப் போராடி தம் இன்னுயிரை ஈகம் செய்தோர் பல்லாயிரக்கணக்கானோர். ஆண், பெண் என்கிற பாலின வேறுபாடின்றி, ஏழை, பணக்காரன் என்கிற பொருளிய வேறுபாடுகளின்றி, உயர்சாதி ரூ கீழ்சாதி என்கிற சமூக வேறுபாடுகளின்றி, தரைப்படை, வான்படை, கடற்படை, தற்கொலைபடை என உலகின் எந்த நாட்டு விடுதலைப்படைக்கும் இல்லாத தனிச்சிறப்புகளுடன் களம் கண்டு மாண்ட அம்மாவீரர்கள் நினைவைப்போற்றும் நாளே நவம்பர் 27. 1982ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று பிரபாகரனின் மடியில் தலைவைத்தபடியே உயிர்விட்ட சங்கர் என்கிற சத்தியநாதன் முதற்களப்பலியான அம்மாவீரனின் மறைந்த நாளே (நவம்பர் 27) மாவீரர் நாள். அந்நாளில் இலட்சியத்துக்குத் தன்னையே ஈந்தரூநாட்டு விடுதலைக்கு உயிரை கொடுக்க முன்வந்த – தமிழ்மக்களின் நல்வாழ்வுக்காக வாழ்வை இழந்த மாவீரர்களுக்கும், தமிழ் பொதுமக்களுக்கும் மரியாதை செலுத்திட உலகம்...

மன்னார் குடியில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் ஆர்ப்பாட்டம் !

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! என வலியுறுத்தி 19.10.2015 திங்கட்கிழமை காலை மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அரசு அலுவலகங்களில் மதசார்புடைய வழிபாடுகள் மற்றும் ஆயுத பூஜை கொண்டாட்டங்களை தடுக்கக்கோரியும், அவற்றிக்கு எதிரான அரசு உத்தரவுகளைநடைமுறைப்படுத்தக்கோரியும், திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமையில் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில், தமிழக அரசு அலுவலகங்களில் எவ்வித மதவழிபாடுகளும் ஆயுத பூஜை கொண்டாட்டங்க-ளும் நடத்தக்கூடாது என்று தமிழக அரசு காவல்துறை உட்பட அனைத்து அலுவலகங்களுகும் ஆணைகள் மூலம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அரசு ஆணைகளை முறையாக நடைமுறை படுத்தப்படாமல் அவற்றிக்கு எதிரான செயல்பாடுகள் அலுவலகங்களில் மிகுந்துள்ளன. ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், கடவுள் படங்கள் சாமியார்களின் படங்கள் சிலைகள் வழிபாட்டுபொருட்கள் வைக்கப்பட்டு கோவில்களில் நடப்பதுபோல் சூடம்கொளுத்துதல், சாம்பிராணி புகைபோடுதல் தீபாராதனை போன்றவைகள் நடந்துவருகின்றன. இதன் ஒருபகுதியாக ஆயுதபூஜை நேரங்களில் மிகவும் ஆடம்பரமாக ஒலிபெருக்கிகளை வைத்து வாழைமரம் கட்டி புரோகிதர்களை அழைத்துவந்து...