சங்பரிவாரங்கள் திப்பு சுல்தானை எதிர்ப்பது ஏன்?
கர்நாடக மாநில அரசு ‘திப்பு சுல்தான் ஜெயந்தி’ என்று பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் நடத்துகிறது. இதற்கு பா.ஜ.க. சங்பரிவாரங்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் இறங்கி வருகின்றன. திப்புசுல்தான் மீது இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்? நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2012 பிற்பகுதியில் பாஜகவிலிருந்து வெளியேறி கர்நாடக ஜனதா பக்சா கட்சி யினை துவக்கிய எடியூரப்பா, திப்பு சுல்தான் மாடல் தலைப்பாகையை அணிந்து கொண்டு கையில் வாளுடன் முஸ்லிம் மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து பா.ஜ.க.வில் சேர்ந்து மீண்டும்அதன் தலைவராகி தற்போது நவம்பர் 10ல் நடைபெற்ற திப்பு ஜெயந்தி விழா எதிர்ப்பில் முன்னணியில் உள்ளார். மைசூர் மன்னரான திப்பு சுல்தான் (1750-1799) சமூக அடையாளங்களைக் கடந்து கலாச்சார நிகழ்வுகளில் ஒவ்வொருவருடைய உருவ மாகத் தோற்றமளிக்கிறார். மைசூரின் வேங்கையாக திப்பு சுல்தான் கருதப்பட்டார். 19ஆம்நூற்றாண்டின் கன்னட நாட்டுப்புற பாடல்களில், போர்க்களத்தில் மரணமடைந்த திப்புவின்மரணம் பாடல்களாக வலம் வந்தன. கர்நாடகாவின்...