Tagged: ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசும் சமூகமும் செய்யவேண்டியது என்ன?”

முற்றுகைப் போராட்டம் ஏன்?

முற்றுகைப் போராட்டம் ஏன்?

தமிழ்நாட்டின் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக கடந்த 3 ஆண்டுகளில் 82 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தலித் இளைஞர்கள். இளவரசன், கோகுல் ராஜ், இப்போது சங்கர். இன்னும் எத்தனை படுகொலைகள் தொடரப் போகிறதோ? நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. தென் மாவட்டங்களிலும் கொங்கு மண்டலத்திலும் ஜாதி வெறி சக்திகள் சவால் விடுகின்றன. இதைத் தடுப்பதற்கு காவல்துறையோ, தமிழக அரசோ எந்தத் தீவிர நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழ்நாட்டில் ‘கவுரவக் கொலைகளே’ நடப்பது இல்லை என்று சட்டமன்றத்தில் அறிவித்தார், ஓ. பன்னீர்  செல்வம். மத்திய சட்ட ஆணையமும் மகளிர் ஆணையமும், ‘கவுரக் கொலைகளை’ தடுப்பதற்கான சட்டவரைவுகளை உருவாக்கி, மாநில அரசுகளின் கருத்து கேட்டு அனுப்பியது. தென் மாநிலங்களில் இதற்கு பதில் அளிக்காத ஒரே ஆட்சி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மட்டும் தான். தென் மாவட்டங்களில் 5 ஆண்டு களில் நடந்த 600 படுகொலைகளில் 70 சதவீதம் ஜாதி ஆணவக் கொலைகள், இதைத் தடுத்து...

”ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசும் சமூகமும் செய்யவேண்டியது என்ன?” – கருத்தரங்கம் திருச்சி

9-4-2016 சனிக்கிழமை மாலை, திருச்சி, புத்தூர் நால்ரோடு, சண்முகம் திருமண மண்டபத்தில், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில், ”ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசும் சமூகமும் செய்யவேண்டியது என்ன?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கத்தின் தொடக்கத்தில்,விரட்டு கலை பண்பாட்டு மையக் குழுவினரால் பறை முழக்கமும்,வீதி நாடகமும் நிகழ்த்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இளந்தமிழகத் தோழர் ஜாசெம் தலைமையில் கருத்தரங்கம் தொடங்கியது. கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, எவிடென்சு அமைப்பின் இயக்குனர் கதிர், கர்நாடக தலித் சுயமரியாதை இயக்கத்தின் பேராசிரியர் சிவலிங்கம்,கம்யூனியூஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் செல்வி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க துணைப் பொதுச்செயலாளர் நந்தலாலா, இளந்தமிழகம் இயக்கத்தின் தோழர் நாசர் ஆகியோர் உரையாற்றினர். அனைவரும் எராளமான புள்ளிவிவரங்களோடும், அக்கறையோடு சேகரித்துவந்த செய்திகளோடும் மிகச் செறிவாக உரையாற்றியது வந்திருந்தோருக்கு பயனுள்ளதாகவும், தொடர்ந்து செயலாற்றுவதற்கு பெரும் ஊக்கமாகவும் அமைந்தது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக்த்...