Tagged: சென்னை

செயல்படாத தீண்டாமை ஒழிப்பு அலுவலகம் முற்றுகை சென்னை 16032016 – நிழற்படங்கள்

சென்னையில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில்.காவல்துறையின் தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் 16.03.2016.புதன் கிழமை,காலை 10 மணி அளவில் ,சென்னை மயிலாப்பூர்,ஐ.ஜி.அலுவலக வளாகத்தில் உள்ள காவல் துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவு அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த முற்றுகைப் போராட்டத்தில் மாவட்ட தலைவர் வேழவேந்தன், மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி, இளந்தமிழகம் அமைப்பின் தோழர் செந்தில்,பரிமளா,அம்பேத்கர் விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் தோழர் ஜெயமணி, எம்.ஆர்,எஸ் தொழிலாளர் சங்கத்தின் தோழர் சேகர், மரணதண்டனை எதிர்ப்புக்குழுவின் தோழர் டேவிட் பெரியார் உள்ளிட்ட 45 தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டார்கள். முற்றுகைப் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக கடந்த 3 ஆண்டுகளில் 82 பேர் படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தலித் இளைஞர்கள். இளவரசன்,...

சென்னை அமைந்தகரையில் கழகம் எடுத்த பொங்கல் விழா

சென்னை அமைந்தகரையில் கழகம் எடுத்த பொங்கல் விழா

சென்னை அமைந்தகரை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தோழர் வேலு முன்னெடுத்து நடத்திய பொங்கல் விழா சிறப்புடன் நடந்தது. விழாவில் மறைந்த நடிகர் சிவாஜி, ‘பராசக்தி’ திரைப்படத்தில் பேசிய நீதிமன்றக் காட்சி வசனத்தினை கழகத் தோழர் ரவி மகன் ஆசிக் சிறப்பாக பேசினார். புதுச்சேரி முரசு கலைக் குழுவினரின் பறையாட்ட இசை மற்றும் நமது தோழர்களின் துள்ளாட்டம் நடைபெற்றது. பெரியார் முழக்கம் 11022016 இதழ்

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – சென்னை புகைப்படங்கள்

சென்னையில் ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் நேற்று 01.02.2016 திங்கள் மாலை 3.00 மணியளவில் ரோகித் வெமுலாவின் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் . ஒத்த கருத்துள்ள அமைப்புகளோடு இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் திவிக வழக்கறிஞர்கள் அருண்,திருமூர்த்தி, ஊடகவியலாளர் தோழர் கவின் மலர், வாலாசா வல்லவன் மா.பெ.பொ.க, குமார் த.பெ.தி.க., தமிழ்நாடு தலித் பெண்கள் இயக்கம் அரக்கோணம், வே.மதிமாறன் எழுத்தாளர், SDPI தலைவர் தேஹலான் பாகவி, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தோழர் ம.வேழவேந்தன் நன்றி கூற மாலை ஆறரை மணியளவில் ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.

மோடி பிரதமராகக் கூடாது – ஏன்?

மோடி பிரதமராகக் கூடாது – ஏன்?

சென்னையில் கழகம் தொடர் கூட்டங்கள் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக 5.4.2014 முதல் 10.4.2014 வரை மோடி ஏன் பிரதமர் ஆகக் கூடாது என்பதை விளக்கி 5 நாள் தொடர் விளக்க தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முதல் நாள் 5.4.2014 சனி மாலை 6 மணியளவில் சைதாப்பேட்டை-ஆலந்தூர் சாலை ஐந்து விளக்கு அருகில் நடந்த கூட்டத்தில் மனோகரன் தலைமை வகிக்க சிவா முன்னிலை வகித்தார். 6.4.2014 ஞாயிறு மாலை 6 மணியளவில் திருவான் மியூர் ஜெயந்தி தியேட்டர் அருகில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஆ.சிவகுமார் தலைமை வகித்தார். 7.4.2014 திங்கள் மாலை 6 மணியளவில் இராயப் பேட்டை டாக்டர் நடேசன் சாலை சந்திப்பில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்திற்கு சித்தார்த் தலைமை வகிக்க, செந்தில் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. தொடர் கூட்டத்தில் சென்னை மண்டல அமைப்புச் செயலாளர் அன்பு தனசேகர், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், வழக்கறிஞர் துரை...