Tagged: காதலர் தினம்

ஜாதி மறுப்பு இணையர்களுக்கான பாராட்டு விழா மேட்டூர் 12022017

ஜாதி ஒழிய சமத்துவம் படைக்க புதிய உலகை உருவாக்க ஆதலால் காதல் செய்வீர்…. ஜாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்போம் சமத்துவ சமூகம் படைப்போம்….. காலை 10 – 12 கருத்தரங்கம் நண்பகல் 12 – 1 இணையர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பிற்பகல் 2 – 3 கலை நிகழ்ச்சிகள் மாலை 3 – 4 இணையர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்துதல் மாலை 4 முதல் பாராட்டு விழா வாய்ப்புள்ள தோழர்கள் முன்பதிவு செய்து தவறாமல் கலந்து கொள்ளவும் 9965025847 8056460580 செய்தி இரண்யா

இனிப்பு வழங்கி, கலை நிகழ்வுகளுடன் கொண்டாட்டம்

இனிப்பு வழங்கி, கலை நிகழ்வுகளுடன் கொண்டாட்டம்

காதலர் நாளில் ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு காதலர் நாளான பிப்.14 – ஜாதி எதிர்ப்பு, பெண்ணுரிமை நாளாக கொண்டாடப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பெரியார் இயக்கங்கள், காதலர் நாளை ஜாதி, மதம் கடந்த காதலை வரவேற்கும் நிகழ்வாக கூட்டங்கள், கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தி, கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடி வருகிறது. ஒரு சில ‘இந்து’ மதவாத அமைப்புகளும், இ°லாமிய அமைப்புகளும் காதலர் நாளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சில ‘இந்து’ அமைப்புகள் காதலர் நாளில் ‘நாய்களுக்கும் கழுதைகளுக்கும்” திருமணம் நடத்துவதாகக் கூறி, அநாகரிகமான போராட்டங்களை நடத்துவது வழக்கம். இதற்கு பதிலடி தரும் வகையில் கழகத் தோழர்கள் கடற்கரையில் காதல் இணையர்களுக்கு இனிப்பு வழங்கி, காதலர் நாளை ஆதரித்து துண்டறிக்கைகள் வழங்கி வந்தனர். இதனால் கடற்கரைக்கு வரும் காதல் இணையர்களை அடிப்பது துன்புறுத்துவது போன்ற மதவாத அமைப்புகளின் வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட்டன. இவ்வாண்டு, சென்னை மாநகர காவல்துறை காதலர் நாளில்...

சென்னை காதல் தின கொண்டாட்டத்தில் மதவாத கும்பலுக்கு பதில் அடி கொடுத்த கருப்பு சட்டைகள்

காதல் தினத்திற்கு தோழர்களுடன் ஏதோ பல நிகழ்ச்சிகள்லாம் திட்டமிட்டோம் ஆனால் நாங்கள் திட்டமிட்டதை விட மிகவும் சிறப்பான நிகழ்ச்சியை ஏற்படுத்தி கொடுத்தது இந்து மக்கள் கட்சி. மெரினா உழைப்பாளர் சிலை அருகில் ஒன்று கூடி காதலர் தினத்திற்காக தயார் செய்த பேனரை புடித்து கொண்டு காதலர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டும் வாழ்த்து தெரிவித்தும் நடந்து சென்றோம். எதிரே தவ்ஹித் ஜமாத் யை சேர்ந்தவர்கள் காதலர் தினத்தை எதிர்க்கும் வகையில் துண்டறிக்கை கொடுக்க அவர்களுக்கும் இனிப்பு வழங்கி காதலர் தின வாழ்த்து தெரிவித்தோம். கொஞ்ச தூரம் சென்ற பிறகு தோழர் நாத்திகன் எங்களிடம் வந்து கண்ணகி சிலை அருகே இந்து மக்கள் கட்சி ஏதோ ஆர்ப்பாட்டம் பன்றாங்களாம் கண்டிப்பா அங்கே இருக்கும் காதலர்க்கு தொந்தரவு கொடுப்பார்கள் நம்ப அங்கே போயிடலாம் திராவிடர் விடுதலை கழக தோழர்களும் இருப்பாங்கனு சொன்ன வுடனே நாங்க அங்க போயிட்டோம். அங்கே ஏற்கனவே தோழர் உமாபதி தலைமையில் திவிக...

பிப்.14 உலக காதலர் நாள் உயர்ந்த காதல் எது?

உணர்ச்சிகளால் உந்தப்படும் காதலை மறுக்கும் பெரியார், அறிவார்ந்த புரிதலோடுக் கூடிய காதலை வரவேற்கிறார். காதல் பற்றி பெரியார் கருத்து. “உண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண்களும் சம நிலையில் பழகும் வாய்ப்புத் தந்து, ஒருவருடைய குணா குணங்களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்!” – குடிஅரசு 21.7.45 நண்பர்களாகப் பழகி புரியுங்கள்! “ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொருவர் அறிந்து கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? குடிகாரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால்தானே தெரியும். திடீரென்று ஒருவரை யொருவர் முடிச்சு போடலாமா? அன்பு, குணம், பழக்க வழக்கம் இவைகள் உணர்ந்து ஒருவருக் கொருவர் நண்பர்களாகப் பழக வேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான்...