Tagged: கவுரி லங்கேஷ்

தோழர் கவுரி லங்கேஷ் அவர்களுக்கு நினைவேந்தல் படத் திறப்பு நிகழ்வு சென்னை 17092017

மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தோழர் கவுரி லங்கேஷ்அவர்களுக்கு நினைவேந்தல் படத் திறப்பு நிகழ்வு… திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக நேற்று (17.09.2017) மாலை 6 மணிக்கு தலைமை அலுவலகத்தில் தோழர்.பெரியார் யுவராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தோழர். எட்வின் பிரபாகரன் முன்னிலை வகித்தார். நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வை தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) அவர்கள் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். நினைவேந்தல் நிகழ்வின் தொடக்கமாக்க தோழர்.கார்த்திக் இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்வில் எழுத்தாளர்.கவுரி லங்கேஷ் அவர்களின் படத்தை கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தி, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நினைவேந்தல் நிகழ்வில் தோழர்.ஜெயநேசன், மனிதி இயக்கத்தின் தோழர்.செல்வி, இளந்தமிழகத்தின் தோழர்.செந்தில், மே17 இயக்கத்தின் தோழர். பிரவீன் மற்றும் கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் எழுத்தாளர். கவுரி லங்கேஷ் அவர்களின் சமூக நோக்கத்தை குறித்தும், சமூகநீதிக்கான அவர் எதிர்கொண்ட பிரச்சனைகளை...

மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட #எழுத்தாளர் கவுரி லங்கேஷ் நினைவேந்தல் படத்திறப்பு சென்னை 17092017

மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட #எழுத்தாளர் கவுரி லங்கேஷ் நினைவேந்தல் படத்திறப்பு நாள் : 17.09.2017, ஞாயிற்றுக்கிழமை, மாலை 6 மணிக்கு. இடம் : திராவிடர் விடுதலைக் கழகம், தலைமை அலுவலகம், மயிலாப்பூர், சென்னை – 04 கண்டன உரை : #தோழர் விடுதலை க இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக தோழர் செந்தில் இளந்தமிழகம் தோழர் பிரவீன் மே 17 இயக்கம் தோழர் செல்வி மனிதி கோழையே உன்னிடம் தோட்டாக்கள்… என்னிடம் அழியா வார்த்தைகள்… எதற்கும் அஞ்ச மாட்டேன்…நான் #கவுரி_லங்கேஷ் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

மதவெறிக்கு பலியானார், கவுரி ‘இராவணன்’

மதவெறி கோழைகளின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியான கவுரி லங்கேஷ் (இராவணன்) வீரமரணத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகம் – வீரவணக்கம் செலுத்துகிறது. அவரது எதிர்நீச்சல் வரலாறு குறித்த ஒரு தொகுப்பு. “கோழையே உன்னிடம் தோட்டாக்கள்; என்னிடம் அழியா வார்த்தைகள்” பத்திரிகையாளரும் சமூகப் போராளியுமான 55 வயது கவுரி லங்கேஷ் – மதவெறியர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் செப்டம்பர் 5 – இரவு 7.45க்கும் 8 மணிக்கும் இடையில். காரிலிருந்து இல்லம் திரும்பியபோது காரை நிறுத்துவதற்காக முன் கதவை திறக்க முயற்சித்தபோது மோட்டார் பைக்கில் வந்த 3 பேரில் இருவர் அவரது மார்பு, வயிறு, கழுத்தில் நேருக்கு நேராக சுட்டு வீழ்த்தி பிணமாக்கி விட்டனர். கவுரியின் தந்தை லங்கேஷ் அவர்களும் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர், மதவாத சக்தி களுக்கு எதிரான முற்போக்கு சிந்தனையாளர். அவர் நடத்தி வந்த ‘லங்கேஷ் பத்திரிகா’ என்ற கன்னட இதழை கவுரி தொடர்ந்து நடத்தினார். ‘லங்கேஷ் பத்திரிகா’, ‘டேபிளாhய்டு’...