ஜாதி ஒழிப்பாளர்கள் ஓர் ஆயுதமாக்கிப் போராட என்னை, நான் ஒப்படைத்துவிட்டேன் உடுமலை கவுசல்யா போர் முழக்கம்
ஜாதிய ஆதிக்கக் குடும்பத்தில் வளர்த் தெடுக்கப்பட்ட நான், அதிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு ஜாதி ஒழிப்புப் போராளியாகி விட்டேன் என்றார், ஜாதி வெறிக்கு தன் துணைவரை பலி கொடுத்த உடுமலை கவுசல்யா. ஆக.20ஆம் தேதி சிதம்பரத்தில்; விடுதலை கலை இலக்கியப்பேரவை நடத்திய ‘திருமா-55’ நிகழ்வில் பங்கேற்று அவர் நிகழ்த்திய உரை. நீங்கள் எனக்குத் தந்திருக்கும் இந்தத் தலைப்பு என் வயதிற்கும், அனுபவத்திற்கும் பொருத்த மில்லாதது; சுமக்கமுடியாத கனம் பொருந்தியது. திருமாவளவன் என்கிற ஒரு அரசியல் ஆளுமை குறித்து சிறியவளான நான் பேசுவதற்கு இனிமேல் தான் என்னை நான் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனாலும், நான் இந்த நிகழ்விற்கு வந்தமைக்குக் காரணம் நான் உங்களில் ஒருத்தி, உங்கள் குடும்பத்தில் ஒருத்தி என்பதைப் பறைசாற்றுவதற்குத்தான். என் குடும்பம், என் பெற்றோர் முத்துராமலிங்கத் தேவரின் வம்சம் எனச் சொல்லிக் கொள்பவர்கள். அவர் குறித்து பெரிதாக எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், அந்த உருவம் சாதிவெறியைத் தூக்கிப் பிடிக்கிறவர்களின்...