Tagged: ஆளுநர் மாளிகை

தமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் 19032017

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் உயர்கல்வி நிறுவனங்களில் தொடரும் தமிழ்நாட்டு மாணவர்களின் மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் 19032017 அன்று காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும்

நுழைவுத் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர் கழகம்-ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

நுழைவுத் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர் கழகம்-ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்யக் கோரியும், தனியார் பள்ளிகளில் 25ரூ இட  ஒதுக்கீட்டை முழுமையாக நடை முறைப்படுத்தவும், பள்ளிகளில் சமஸ்கிருத திணிப்பை கைவிடக் கோரியும். தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் மாநில அமைப்பாளர் பாரி சிவக்குமார் தலைமையில் 7.7.2016 அன்று காலை 10.30 மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஆளுநர் மாளிகை அருகே திரண்ட தோழர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர் பின்னர் ஊர்வலமாக சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்ட மாணவர்கள் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். இப் போராட்டத்தில் தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ், விவேக், பல்லடம் மதிவாணன், மயிலாடுதுறை கார்த்திக், மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளை சேர்ந்த பாரி மைந்தன், பார்வைதாசன், பகலவன், ரம்யா, கலை, செம்பியன் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம்...

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு கொண்டு வர முயற்ச்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், பொது நுழைவுத் தேர்வு கொண்டுவரும் திட்டத்தை கைவிட கோரியும் 07.07.2016 அன்று சென்னையில் தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு மாணவர் கழகம் மற்றும் தோழமை அமைப்பு மாணவர் தோழர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டனர். கோட்டூர் புரம் தனியார் திருமண மண்டபத்தில் தோழர்கள் வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் 07072016

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்!! மத்திய அரசு மருத்துவப் படிப்புக்கு பொதுநுழைவுத் தேர்வு கொண்டுவர தொடர்ந்து முயற்ச்சிப்பதை எதிர்த்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் . நாள் : 07/07/2016 (வியாழன்) நேரம் : காலை 10.00மணி இடம் :கிண்டி (ஆளுநர் மாளிகை) #தமிழ்நாடு_மாணவர்_கழகம் தொடர்புக்கு :9688310621,9092748645. இடஒதுக்கீட்டுக்கு எதிரானதும், கிராமப்புற உழைக்கும், ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் மருத்துவம் படிப்பதை முற்றிலும் தடுக்க நினைக்கும் மத்திய அரசின் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு (தகுதித் தேர்வு) என்பது மிகவும் ஆபத்தான ஒன்று. நம் வருங்காள தலைமுறையை காக்க மனிதநேயத்தோடு ஒன்று கூடுவோம். தமிழ்நாட்டில் பொது நுழைவுத் தேர்வை கொண்டுவர நினைக்கும் மத்திய அரசின் முடிவை தகர்த்தெறிவோம் .

பன்னாட்டு விசாரணை தீர்மானத்தை இந்தியா நீர்த்து போகச் செய்யக் கூடாது: ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

பன்னாட்டு விசாரணை தீர்மானத்தை இந்தியா நீர்த்து போகச் செய்யக் கூடாது: ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

அய்.நா.வின் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் பன்னாட்டு விசாரணையை உறுதிப் படுத்துவதாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால் இந்தியா தலையிட்டு துரோகம் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி தோழர்கள் கைதானார்கள். 24-03-2014 திங்கட்கிழமை காலை 11-00 மணியளவில், ஆளுநர் மாளிகை முற்றுகையிடுவதற்காக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் எதிரிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்ட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு அமைத்திட இந்திய அரசு வகை செய்ய வலியுறுத்தி நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், த.பெ.தி.க பொதுச்செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சி செல்வி, சேவ் தமிழ்ஸ் செந்தில், பேராசிரியர் சரசுவதி, காஞ்சி மக்கள் மன்றம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், எஸ்.டி.பி.ஐ, உள்ளிட்ட 18 இயக்கங்களை...