திருப்பூரில் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா !

திருப்பூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இருசக்கர வாகன ஊர்வலம் மற்றும் 20 இடங்களில் கொடியேற்று விழாவாக நடைபெற்றது.

04.10.2015 அன்று காலை 10 மணிக்கு திருப்பூர் ராயபுரத்தில் துவங்கிய இருசக்கர வாகன ஊர்வலம் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு அவர்கள் தலைமை தாங்கினார்.மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் ஊர்வலத்தை துவங்கி வைத்தார்.ஊர்வலத்தின் துவக்க உரையை தோழர் சூலூர் பன்னீர்செல்வம் அவர்கள் நிகழ்தினார்.பறையிசை முழங்க ராயபுரம் பகுதி கழக கொடியை மாநகர செயலாளர் தோழர் நீதி ராசன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

வாகன ஊர்வலம் திருப்பூரின் முக்கிய சாலைகளின் வழியாக இரயில் நிலையம்,மாஸ்கோ நகர்,கன்னகி நகர், கொங்கனகிரி, பாலமுருகன் வீதி,திருவள்ளுவர் நகர்,ஜீவா நகர், ரங்கனாதபுரம், சாமுண்டி புரம், பெரியார் காலணி, அம்மாபாளையம், ஆத்துப்பாளையம்,போயம்பாளையம்,புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சந்தைப் பேட்டை, இடுவம் பாளையம், முருகம்பாளையம்,வீரபாண்டி பிரிவு ஆகிய இடங்களில் கொடியேற்றப்பட்டது.கொடியேற்றிய ஒவ்வொரு இடங்களிலும் கழக தோழர்கள் தெரு முனைப்பிரச்சாரம் செய்து கூடிருந்த மக்களுக்கு திராவிட இயக்க கொள்கைகள், சாதனைகள் ,இயக்கத்தின் செயல்பாடுகளை எடுத்துரைத்தனர்.

இறுதியில் மாலை 7 மணி அள்வில் வீரபாண்டி பிரிவில் கொடியேற்றத்துடன் வாகன் ஊர்வலம் நிறைவடைந்தது.தோழர் மாதவன் அவர்கள் நன்றியுரை ஆற்றினர்.

இந்த பெரியார் பிறந்த நாள் நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநிலஅமைப்பாளர் ஆசிரியர் தோழர் சிவகாமி,தோழர் அகிலன் உள்ளிட்ட 50 தோழர்கள் கலந்துகொண்டனர்.

You may also like...