கோவையில் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கியது

இரண்டாம் கட்ட மக்கள் சந்திப்பு இயக்கம், ஜூன் 10 ஆம் தேதி பகல் 11 மணியளவில் கோவை காந்திபுரத்தில் தொடங்கியது. கழகப் பொருளாளர் இரத்தினசாமி, செயலவைத் தலைவர் துரைசாமி, மாவட்ட தலைவர் நேரு உள்ளிட்ட 20 தோழர்கள் இயக்கத்தில் பங்கேற்றனர். கோவை நகரம் முழுதும் மக்களை சந்தித்து துண்டறிக்கைகளை வழங்கி, கழக நூல்களை விற்பனை செய்து வருகின்றனர். கழகத்தின் முயற்சியை பொது மக்கள் பெரிதும் பாராட்டி வரவேற்று வருகிறார்கள். ஒவ்வொருவரிடமும் 10 ரூபாய் என்று நன்கொடை திரட்டப்படுகிறது. 100 ரூபாய் நன்கொடை தருவோருக்கு 20 ரூபாய்க்கான நூல்கள் வழங்கப்படுகின்றன.

ஜூலை 4 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கம் தொடருகிறது. 4 ஆம் தேதி மேட்டுப் பாளையத்தில் நிறைவு பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

15.6.2014 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களை உக்கடம்பகுதியில் சந்தித்துப் பாராட்டுகளைத் தெரிவித்தார். அன்று மாலை கோவையில் நடந்த மறைந்த நடிகர் மணிவண்ணன் நூல் வெளியீட்டு விழாவில் கழகத் தலைவர் பங்கேற்றார். மக்கள் சந்திப்பு இயக்கத் தோழர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

இரவு நிகழ்ச்சி முடிந்து தோழர்கள் தங்கியுள்ள திண்ணியம்பாளையம் சென்று தோழர்களுடன் கழகத் தலைவர் கலந்துரையாடினார். தோழர்கள் மக்களை சந்திக்கும் இயக்கத்தில் உற்சாகத்துடன் பங்காற்றி வருகிறார்கள். – நமதுசெய்தியாளர்                                                 (முழு விவரம் பின்னர்)

பெரியார் முழக்கம் 19062014 இதழ்

You may also like...