கோவையில் தெருமுனை கூட்டங்கள்!
கோவை மாநகரக் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம் நவ.12,2026 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு பீளமேடு ரொட்டிகடை மைதானத்தில் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்மல் குமார் (மாநகரத் தலைவர்), துரைசாமி (திமுக), சித்ரா வெள்ளியங்கிரி மாமன்ற உறுப்பினர் (மதிமுக), தி.செ.கோபால்(ஆதபே) தோழமை அமைப்புப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராஜன் உரையாற்றினார்.
பகுதியில் உள்ள சிறு வியாபாரிகள் நிகழ்ச்சி நடக்க நன்கொடை கொடுத்து உதவினர். மாலை 6 மணி அளவில் ஆவாரம்பாளையம் ரெட் ரோஸ் பேக்கரி அருகில் கணபதி பகுதி அமைப்பாளர் சதீஷ் தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணன் பகுத்தறிவு பாடல் பாடினார்.
தோழர்கள் மாறன்(ம.அ.க), சூலூர் பன்னீர்செல்வம் (திவிக), திருப்பூர் முத்து(திவிக), இனியவன்( சிபிஎம் ரெட் ஸ்டார்), ரகுபதி (தி.ம.இ), மலரவன்(பு.இ.மு) ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி உரையாற்றினார். கலந்து கொண்ட தோழர்களுக்கு தோழர் ரகுபதி தேநீர் வழங்கினார். நிகழ்ச்சிக்கு அருகில் இருந்த ‘சக்தி பத்திரப்பதிவு’ அலுவலக உரிமையாளர் மின்சாரம் வழங்கி உதவினார்.
பெரியார் முழக்கம் இதழ் 19112026
