கீதா-நவீன்குமார் சுயமரியாதை இணையேற்பு விழா

சன் குழும ஊடகவியலாளர்கள் கீதா-நவீன்குமார் சுயமரியாதை இணையேற்பு விழா அக்-25 அண்ணா நகர் ஷிசெல் உணவகத்தில் நடைபெற்றது. சிபிஅய் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன், சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி (திமுக) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். காசு. நாகராசன் வரவேற்புரை ஆற்றினார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று இணையேற்பை நடத்தி வைத்தார். தோழர் தினேஷ் தொகுத்து வழங்கினார். ஊடகவியலாளர்கள் குணசேகரன், நெல்சன் சேவியர், பாரதி செல்வா, சென்னை பிரஸ் க்ளப் பொதுச் செயலாளர் ஆசிஃப், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அற்புதம் அம்மாள், பேரறிவாளன், சிபிஎம் செல்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 05112026

You may also like...