வாசகர் கடிதம்
புரட்சிப் பெரியார் முழக்க இதழில் `தேர்தல் ஆணையத்தின் கடந்த கால வரலாறு’ பற்றிய செய்தி மிகவும் சிறப்பு. பெண்கள் கணவர் பெயரையோ தங்கள் வீட்டில் உள்ள மூத்த ஆண்கள் பெயரையோ சொல்லாமல் இருந்ததற்காக அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் இருந்தார்கள் என்ற செய்தி வியப்பாக இருக்கிறது. ஞானேஷ்குமாரின் இன்றைய அட்டூழியங்கள் இதில் அம்பலப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில், கோயில் கதவின் பூட்டை உடைத்து ஜாதி ஆதிக்கவாதிகளை தீண்டாமை வழக்கில் பதிவு செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்திருப்பது வீரமிக்க செய்தி! ஆயுத பூஜை குறித்து அண்ணாவின் கேள்விகள் சிந்திக்க தூண்டுகிறது. “சரஸ்வதி பூஜை- ஆயுத பூஜை ஆபாசங்கள்” என்ற தலைப்பில் வெளிவந்த பெரியாரின் கட்டுரையை படித்து எனது நண்பர் பாராட்டினார்.
மு.சாமிநாதன் (குமாரபாளையம்)
பெரியார் முழக்கம் இதழ் 05112026
