நங்கவள்ளியில் கழகத் தோழர்கள் சந்திப்பு!
நங்கவள்ளியில் 22.03.2026 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் இல்லத்தில் கழகத் தோழர்கள், இளைஞர்கள் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பில் “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்” திமுக ஆட்சியை உறுதி செய்வோம்.. மதவெறி கூட்டணியை விரட்டி அடிப்போம் என்கிற தலைப்பில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டங்களின் நிறை குறை குறித்தும், வரவு செலவு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
முதல் கட்ட பரப்புரை நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட பரப்புரைக்கான திட்டம் குறித்தும் இதில் ஆலோசிக்கப்ட்டது. அடுத்கக்கட்ட வேலைத் திட்டங்களாக இதுவரை கூட்டங்கள் நடைபெறாத இடங்களாக தேர்வு செய்து (வாரம் 2 கூட்டங்கள்) கிராமப்புற பிரச்சாரங்கள் நடத்துவது எனவும், 2026 சட்டமன்ற தேர்தல் முடிந்த உடன் நூல் திறனாய்வும், பயிற்சி வகுப்புகளும், வாசகர் வட்டமும் நடத்தலாம் என தோழர்கள் ஆலோசனை வழங்கினர்.
சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகரன், வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவசண்முகம், தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்கள் நாகராஜ், கவியரசு, கொங்கனாபுரம் கோகுல், மேச்சேரி சபரி, தமிழருவி, பேரறிவாளன், நிலவன், புகழேந்தி, பெரிய சோரகை ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர்கள் அனைவருக்கும் இரவு உணவு தோழர் லலிதா ஏற்பாடு செய்திருந்தார்
பெரியார் முழக்கம் இதழ் 30042026
