தோழர் அ.செ.வீரபாகு முதலாம் ஆண்டு நினைவு நாள்!
திருப்பூர் கழகத் தோழர் தனபால் அவர்களின் தந்தை வீரபாகு அவர்களின் நினைவேந்தல் கூட்டம் 25.10.2026 ஞாயிறு பிற்பகல் 1.30மணியளவில் திருச்சி மணப்பாறை, கீழையூர் கிராமம் அனந்தனூர் இல்லத்தில் நடைபெற்றது. திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் துரைகாசிநாதன் தலைமை தாங்கினார். வீரபாகு குடும்பத்தினர் அஞ்சம்மாள் வீரபாகு, அன்பழகன், சசிகலா, கவிதா, இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீரபாகு அவர்களின் படத்தை கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் திறந்து வைத்தார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி புகழ் வணக்கம் செலுத்தி முழக்கமிட்டார்.
நினைவேந்தல் உரை நிகழ்த்தியவர்கள் சிபிஅய் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், தி.க நகரச் செயலாளர் சி.எம்.ரமேஷ், விசிக மாவட்டச் செயலாளர் சக்திவேல், திமுக மாவட்ட பிரதிநிதி பந்தல் முருகேசன், கண்ணுச்சாமி (ரயில்வே ஒய்வு), பாய் வியாபாரி பொன்னுச்சாமி திமுக, தலைமைக்குழு உறுப்பினர் மனோகரன், கழக மாவட்ட அமைப்பாளர் ஆற்றல் அரசு, கழகத் தோழர்கள் அனந்தானூர் முருகேஷ், மேலூர் சத்தியமூர்த்தி, கோவிந்தசாமி (வனத்துறை ஓய்வு) ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்கள். நிகழ்வில் திருச்சி அரசெழிலன் இணையர், கார்த்திக், நடுப்பட்டி பாலசுப்பிரமணி, இருதயராஜ் தி.ந.கழகம் மணப்பாறை ஆகியோர் கலந்துகொண்டார்கள். திருப்பூர் மாநகரத் தலைவர் தனபால் நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் இதழ் 05112026
