கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்- தோழர் செங்குட்டுவன் நினைவேந்தல்

பெரியாரின் பெருந்தொண்டர், முற்போக்கு எழுத்தாளர், ஆசிரியர் தோழர் செங்குட்டுவன் (எ) பூவராகன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி செங்குட்டுவன் குடும்பத்தினர் மற்றும் தோழமை இயக்கத் தோழர்களின் சார்பாக அக்.24,2026 காலை 10.00 மணியளவில் கோவை இரயில் நிலையம் எதிரில் உள்ள திவ்யயோதயா ஹாலில் நடைபெற்றது.

வாலாசா வல்லவன் (மா.பெ.பொ.க துணை பொதுச்செயலாளர்) தலைமை வகித்து நினைவேந்தல் உரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தோழர் செங்குட்டுவன் படத்தை திறந்து வைத்தார். அவர் பேசுகையில் செங்குட்டுவன் மதம் மனிதனை முட்டாளாக்குவதைக் குறித்தும், அறிவியலால் மக்கள் முன்னேற்றமடைந்ததைப் பற்றியும் கட்டுரைகள் மூலம் எடுத்துரைத்தவர் மறைந்த செங்குட்டுவன் என்று குறிப்பிட்டார்.

வந்தியத்தேவன் (ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர்), வாழப்பாடி சுகுமார், ஆறுச்சாமி (த.பெ.தி.க அமைப்புச் செயலாளர்), ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். செங்குட்டுவன் அவர்களின் மருமகளான முனைவர் சுல்தானா பேசுகையில், செங்குட்டுவன் அவர்களால் பெரியாரின் சிந்தனைகளில் ஈர்க்கப்பட்டு தன்னை முஸ்லீம் மதத்திலிருந்து விடுவித்துக் கொண்டு நாத்திகச் சிந்தனைவாதியாக மாற்றிக் கொண்டது குறித்து விளக்கினார். பெர்ட்ரண்ட் ரஸல் நன்றி கூறினார். நிர்மல்குமார் (கோவை மாநகரத் தலைவர்) இந்நிகழ்வை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தார். கோவை மாவட்டக் கழகத் தோழர்களான பன்னீர்செல்வம் (மாவட்டச் செயலாளர்), வெங்கட் (மாநகரச் செயலாளர்), கிருஷ்ணன் கதிரவன், சதீஷ், லோகு, ராஜலட்சுமி, அறிவுக்கனல் ஆகியோர் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 29102026

You may also like...