“ஞானேஷ் புரோ; நீ காலி புரோ’’

வாக்காளர் சிறப்புத் தீவிரச் சீர்த்திருத்தச் சட்டத்துக்கு (SIR) எதிராக ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி, வாக்குரிமை கூட்டியக்கம் நடத்திய `ஞானேஷ் புரோ நீ காலி புரோ’ என்ற முழக்கத்துடன் கவன ஈர்ப்புக் கூடுகை, அக்.24,2026 அன்று கீழ்ப்பாக்கம் உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றத்தில் நடைபெற்றது.
கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், வழக்கறிஞர் அருள்மொழி (திக), தியாகு, ஆர்.கீதா (பெண்ணுரிமை இயக்கம்) உள்ளிட்ட பலர் தோழமை இயக்கங்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். செல்வி (மனிதி) ஒருங்கிணைத்தார். தொடர்ந்து அக்.25,26 ஆகிய 3 நாட்கள் தொடர் கூடுகை போராட்டம் நடைபெற்றது.
தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரன்பு மற்றும் தோழர்கள் ஷர்மிளா, குமார், அசோக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 29102026

You may also like...