திருப்பூரில் ‘மார்க்சிய திராவிடர் பேரவை’ தொடக்கம்

தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர்-17 அன்று திருப்பூர் தமிழ் அமுதன் புதிய இயக்கம் கண்டார். தமிழ் அமுதன் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக புரட்சிகர இளைஞர் முன்னணியில் செயல்பட்டு வந்தவர். சில முரண்கள் காரணமாக தன்னை அங்கிருந்து விடுவித்துக் கொண்டு முற்போக்கு அமைப்புகளின் நிகழ்வுகளில் கலந்து கொண்டு மக்கள் பணியைத் தொடர்ந்தார். மேலும் மக்கள் பணியைத் தொடர தனக்கென ஒரு அமைப்பு வேண்டும் என்று சிந்தித்த தமிழ் அமுதன் மார்க்சிய திராவிடர் பேரவை என்ற இயக்கத்தைத் தொடங்கி உள்ளார். இயக்கத்தின் கொள்கையாக ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, தமிழ் மொழிப் பாதுகாப்பு (இந்தி எதிர்ப்பு), சனாதன எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு ஆகிய தளங்களில் பெரியாரிய அமைப்புகளோடு இணைந்து எமது அமைப்பு செயல்படும் என்பதை உறுதிபடக் கூறினார். இயக்கத்தின் கொடி அறிமுக நிகழ்வு அம்மாபாளையம் பெரியார் படிப்பகத்தில் மாலை 5 மணி அளவில் நடைபெற்றது

கொடியை அறிமுகப்படுத்தி கழகப் பொருளாளர், துரைசாமி, முகில் ராசு மாவட்டத் தலைவர், ஆறுச்சாமி மாவட்டத் தலைவர், தி.க, சண். முத்துக்குமார், மாவட்டத் தலைவர்-தபெதிக, பாரதி சுப்பராயன், தலைவர்- நவீன மனிதர்கள் இயக்கம், எஸ்.ஏ. காதர் எழுத்தாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் மாரிமுத்து மாநகர துணைத் தலைவர், அருண் அமைப்புச் செயலாளர்-நவீன மனிதர்கள் இயக்கம், கழகத் தோழர்கள் இரவி, குணா, இனியன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

பெரியார் முழக்கம் இதழ் 22102026

You may also like...