ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, அக்-16, காலை 10 மணிக்கு, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இடதுசாரிகள் ஒருங்கிணைத்த இந்நிகழ்வில், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி, திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட பலரும் கண்டன உரையாற்றினர்.
தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர் மா. வேழ வேந்தன், மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், பகுதி அமைப்பாளர் சேத்துப்பட்டு ராஜன், தோழர்கள் மயிலை மனோகர், தினகரன், சிகாமணி, செல்வகுமாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் இதழ் 22102026

You may also like...