தோழர்.பூவராகன் முடிவெய்தினார்!

தோழர் பூவராகன் 94-ஆம் வயதில் கோவையில் அக்-7ம் தேதி முடிவெய்தினார். நாத்திக அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களை தமிழில் ஆக்கியவர். சிந்தனையாளன் இதழ்களில் ப.செங்குட்டுவன் என்ற பெயரில் கட்டுரைகளை எழுதியவர். பெரியார் தலைமையில் பெரியாரின் பெருந்தொண்டர் பேராசிரியர் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் தங்கையை ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர் ஆவார். தோழர் பூவராகன் எழுதிய “அறிவறிந்த மூடர்கள், விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் மூடநம்பிக்கையின் வீழ்ச்சியும், மதம் விளைத்த மாச்சரியங்கள், கீதை ஒரு சமூக விரோத நூல்” போன்ற பல நூல்களை திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக புகழ்வணக்கம் செலுத்துகிறோம்.
பெரியார் முழக்கம் இதழ் 15102026

You may also like...