உதயநிதிக்கு கழகம் சார்பில் வரவேற்பு!

ஏப்ரல்-20, மாலை 6 மணிக்கு, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிக்கு, பிரச்சாரம் செய்ய வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, இராயப்பேட்டை வெங்கடாசலம் தெருவில், பல கட்சிகள் இணைந்து வரவேற்பு அளித்தனர். துணை முதல்வர் முன்னிலையில், திமுக – திவிகவினர் இணைந்து, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கமிட்டனர்.
வி.எம் தெருவின் பெயரை, பெரியார் தொண்டர் “பத்ரி நாராயணன் தெரு” என்று மாற்றியமைக்க, பொதுமக்களிடம் நூற்றுக்கணக்கான கையெழுத்து பெற்ற கோரிக்கை மனு, சென்னை மாவட்டக் கழகம் சார்பில் வழங்கப்பட்டது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், க.வே. மோகன் தலைமையிலான வட்டக்கழக திமுகவினர் ஒருங்கிணைத்த நிகழ்வில், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் மா. வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், இணையதளப் பொறுப்பாளர் விஜய் குமார், மாவட்டத் துணைச் செயலாளர் இராவணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப. அருண், திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் சே. ராஜேஷ், தோழர்கள் லேகா, புகழேந்தி, சுகுமார், குகன், அன்பரசு, பாரி சிவா, மயிலை சிவா, சுரேந்தர், செந்தில், தமிழ்ச்செல்வன், தாமரை, எம்ஜிஆர் நகர் துரை, அன்பரசன், தீபக், லட்சுமணன், ஜெயந்தி, யாழினி, புருஷோத்தமன், முரளிகிருஷ்ணன், பிரபாகரன், பிரகாஷ் மாஸ்டர், லீலா, நிரஞ்சன், மயிலை மனோகர், முழக்கம் உமாபதி, சேலம் இளவரசன், குடிஅரசு, ராஜன், ஆர்த்தி‌, ராஜா உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர்.
தேர்தல் பணிமனையை பார்வையிட வந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி அவர்களை சந்தித்தபோது கழகத்தின் செயல்பாடுகளை பாராட்டினார்.
பெரியார் முழக்கம் இதழ் 30042026

You may also like...