தாராபுரம் தொகுதியில் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தோழர்களுடன் பரப்புரை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர் வழக்கறிஞர் எஸ். சுகன்யா அவர்களுக்கு திவிக ஆதரவு தெரிவித்து 23-09-2026 புதன் கிழமை 11 மணி அளவில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமையில் இடைதேர்தல் பரப்புரை செய்தனர்.

திமுக துணை பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான, தேர்தல் பணிக் குழுத் தலைவர்களான ஆ. இராசா, துணை பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.என் நேரு, திமுக முன்னாள் அமைச்சர்கள் பெரிய கருப்பன், கயல் விழி செல்வராஜ், கிழக்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோருக்கு அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி பயனாடை அணிவித்து ஆதரவைத் தெரிவித்தார். திமுக மாநில மாணவர் அணி தலைவர் இர.வீரமணி உடன் இருந்தார். நிகழ்வில் சென்னிமலை செல்வராஜ் ஈரோடு மாவட்டத் தலைவர், நல்ல தம்பி ஈரோடு மாநகரச் செயலாளர், சு.சிவானந்தம் ஒன்றியச் செயலாளர் மடத்துக்குளம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 15102026

You may also like...