கழக இளைஞரணி நடத்திய ‘தோழமைகளின் கூடுதல்’

கழக சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் 02.10.2026 அன்று “தோழமை கூடும் நேரம்” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘இளைய தலைமுறையினரின் நிகழ்கால அரசியல்’ என்னும் தலைப்பில் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, ‘பிம்பச் சிறை 2.0’ என்னும் தலைப்பில் ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரன்பு தொகுத்து வழங்கினார். எதிர்வரும் குடும்ப விழா நிகழ்விற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக இளைஞரணி அமைப்பாளர் பா.அருண் மாவட்டச் செயலாளரிடம் ரூ.5000 நன்கொடையாக வழங்கினார். நிகழ்வில் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டத் தலைவர் வேலவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராவணன், கழக இளைஞரணி, தமிழ்நாடு மாணவர் கழகம் மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 15102026

You may also like...