கணியூரில் சிந்தனையைத் தூண்டிய பெரியார் கருத்தரங்கம்

திருப்பூர்: மடத்துக்குளம் ஒன்றியக் கழகம் சார்பாக கருத்தரங்கம் 19.09.2026 சனிக்கிழமை மாலை 5.30 முதல் இரவு 9.00 மணி வரை ஓம் முருகா திருமண மண்டபம் கணியூரில் நடைபெற்றது.

மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் கணக்கன் தலைமை தாங்கினார். மடத்துக்குளம் ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் சி.சிவானந்தம் வரவேற்புரை ஆற்றினார். திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு அறிமுக உரை நிகழ்த்தினார். கழகப் பொருளாளர் சு.துரைசாமி நோக்கவுரையாற்றினார். சடங்குகள் என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் சிவகாமி கருத்துரையாற்றினார். தலைமைக்கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி மூடநம்பிக்கை என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்.

திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். வெண்மணி அவர்களுக்கு அக்கினி கோத்திரம் தாத்தாச்சாரி எழுதிய ’சடங்குகளின் கதை’ என்ற நூலை திருப்பூர் மாநகர அமைப்பாளர் சரசுவதி, மடத்துக்குளம் செல்வி ஆகியோர் வழங்கினார்கள். சரவணன், நன்றி கூறினார். மடத்துக்குளம் ஒன்றியக் கழகத் தோழர்கள் கருத்தரங்கிற்கான பணிகளை மேற்கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக க.தங்கவேல் (மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திதக), வழக்கறிஞர் முருகேசன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), க்(மாநில இளைஞர் அணிச் செயலாளர்-திதக), இராமச்சந்திரன்(மாவட்டச் செயலாளர் திதக) கலந்து கொண்டனர். கழகத் தோழர்கள் மடத்துக்குளம் இராசேந்திரன், பரிமளராசன்(சமூக ஊடகப் பொறுப்பாளர்-திவிக), மடத்துக்குளம் சங்கீதா ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 08102026

You may also like...