கோவையில் கொள்கைப் பரப்புரை தெருமுனைக் கூட்டங்கள்
பெரியாரின் 148 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டக் கழகம் மற்றும் விசிக இணைந்து 23/9/2026 புதன் கிழமை மாலை 4 மணிக்கு சுல்தான்பேட்டை பேருந்து நிறுத்தம் முன்பும் 6:30 மணிக்கு செஞ்சேரிமலை ஆட்டோ ஸ்டாண்ட் முன்பும் தெருமுனைக் கூட்டமாக நடத்தினர். சுல்தான்பேட்டை பேருந்து நிறுத்தம் முன்பு விசிக பொறுப்பாளர் விடுதலைச் செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோவை கிருஷ்ணன் பகுத்தறிவுப் பாடலை பாடினார். திருப்பூர் முத்து, நீலம் பண்பாட்டு மையம் வழக்கறிஞர் சூர்யகுமார், சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல்குமார் ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவாக சமூகவலைதளப் பொறுப்பாளர் பரிமளராசன் பெரியாரின் போராட்டங்களால் தமிழர்கள் அடைந்த நன்மைகளை விளக்கி நிறைவுரையாற்றினார். திருப்பூர் ஈழமாறன் நன்றி கூறினார். கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் செம்பருதி தேநீர் வழங்கினார்.
2-வது கூட்டம் செஞ்சேரிமலையில் விசிக தங்கவளவன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக சமத்துவத்தை வலியுறுத்தும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து சந்திரன் விசிக வரவேற்புரையாற்றினார். திராவிட தமிழர் கட்சி லட்சுமி, தமிழ்ப் புலிகள் கட்சி சிகாவுதீன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை சந்திரன், விடுதலைச் செல்வன் விசிக மற்றும் கழகத் தோழர்கள் திருப்பூர் முத்து சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினர். நிர்மல்குமார் தன் உரையில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் நடத்திய பண்பாட்டுப் புரட்சிகளையும் பெரியாரின் ஜாதி,மத,கடவுள் எதிர்ப்பை விளக்கிப் பேசினார். நிறைவாக கழகப் பொருளாளர் துரைசாமி பார்ப்பனியக் கொடுமைகளையும் பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டில் அடைந்த பயனையும் கல்வியின் சிறப்பையும் விளக்கி நிறைவுரையாற்றினார்.
நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவை பிரபாகரன், ஜாதி ஒழிப்பு முன்னணி செல்வராஜ், திராவிட தமிழர் கட்சி பேரறிவாளன், தமிழ்ப் புலிகள் கட்சி சந்திரன், கழகத் தோழர்கள் அனுப்பபட்டி கோவிந்தராஜ், செம்பருதி திருப்பூர் தோழர்கள் குணா, ரவி ,அய்யப்பன், பல்லடம் சண்முகம் மற்றும் பகுதி மக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட தோழர்களுக்கு பெரியார் அம்பேத்கரிய நூல்கள் நிகழ்ச்சியின் நினைவாக வழங்கப்பட்டது.
பெரியார் முழக்கம் இதழ் 08102026
