*பிள்ளையார் அரசியல்*
வாளும் வடிவேலும் வாய்த்த வெடிகுண்டும்
நாளும் உயிர்குடிக்க நான்தருவேன்- நீளும் கை
பொங்கும் எரிமுகத்துப் பூதக் கணபதியே
எங்கும் கலவரத்தை தா.
*பெரியார்*
அறிவில் பெரியார் அழகில் பெரியார்
புரிநூல் மனிதனைப் பூட்டும் பெரியார்
கருப்புக்குரியார் கருத்துக்கு ரியார்
வெறுப்பினில் வைப்பார் நெருப்பு.
அண்மையில் முடிவெய்திய தோழர் வைகறை வாணன் “கொடை தருக கோடி பெறுக” என்ற தலைப்போடு எழுதி 2019-ல் வெளியிட்டிருந்த ” உரைநடை வெண்பா” நூலில் இடம் பெற்றுள்ள சில வெண்பாக்கள்…
பெரியார் முழக்கம் இதழ் 17092026
