கழகத் தோழர் பிரவீன் – சமீம் மோனிஷா மதமறுப்பு திருமணம்!

கழகத் தோழர் சீ. பிரவீன்குமார் – ஜா. சமீம் மோனிஷா ஆகியோரின் சுயமரியாதை திருமணம், மார்ச்-23, காலை 11 மணிக்கு, தேனாம்பேட்டை சமூகநலக் கூடத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் முன்னிலையில் நடைபெற்றது.

மயிலை சுகுமாரின் ஒருங்கிணைப்பில், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, விசிக சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சாரநாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சென்னை மாவட்டத் தலைவர்கள் வேழவேந்தன், சேத்துபட்டு இராசேந்திரன், துணை செயலாளர் இராவணன், மாவட்ட அமைபாளர்கள் தட்சணாமூர்த்தி, ம.கி எட்வின் பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பொறுப்பாளர்கள் கோபிநாத், சூர்யா மற்றும் கழகத் தோழர்கள் பலர் பங்கேற்றனர். கழக ஏட்டுக்கு மணமக்கள் ரூ. 2,000 நன்கொடையாக வழங்கினர்.

பெரியார் முழக்கம் இதழ் 23042026

You may also like...