வழக்கறிஞர் இரண்யாவுக்கு பாராட்டு விழா; கழக ஏட்டுக்கு ரூ.5000 நன்கொடை வழங்கினார்

கழகத் தோழர் இரண்யா வழக்கறிஞராகப் பதிவு செய்ததைப் பாராட்டும் விதமாக திருவல்லிக்கேணி பகுதிக் கழகம் சார்பில் தோழர்கள் சூர்யா (பகுதி அமைப்பாளர்), கோபிநாத் (பகுதி தலைவர்) ஆகியோர் செப்-6 அன்று மாலை 6 மணியளவில் விஜயா மண்டபத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தனர்.
மாவட்டச் செயலாளர் உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார். தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன், வழக்குரைஞர் ரமேஷ் பெரியார், மதுரை வாசுகி மற்றும் மஞ்சுநாதன் ஆகியோர் உரையாற்றினர். சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர். நிறைவாக தோழர் இரண்யா நன்றி கூறினார். வழக்கறிஞராக ஆனதற்கு மகிழ்வாக ரூ.5000 புரட்சிப் பெரியார் முழக்கத்துக்கு நன்கொடையாக சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதியிடம் வழங்கினார்.
பெரியார் முழக்கம் இதழ் 17092026

You may also like...