மேட்டூர் குமரப்பா தாயார் முடிவெய்தினார்!

கழக மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா அவர்களின் தாயார் சுசீலா அவர்கள் 28.08.2026 வெள்ளி அதிகாலை 4.00 மணியளவில் முடிவெய்தினார். அவர்களின் இறுதி நிகழ்வு மாலை 4.00 மணியளவில் மேட்டூர் ஆஸ்பத்திரிகாலனி பகுதியில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்றது.
இறுதி நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி இறுதி மரியாதை செலுத்தினார். கழகப் பொருளாளர் துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்ட, ஒன்றிய, கிளைப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
பெரியார் முழக்கம் இதழ் 10092026

You may also like...