செங்கொடிக்கு கழக சார்பில் வீரவணக்கம்; பேரறிவாளன் பங்கேற்றார்!
தோழர் செங்கொடியின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை, ஆக-28, அன்று மாலை 6 மணிக்கு சென்னை ஷெனாய் நகர் வைத்தியநாதன் தெருவில், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.வ. வேலு ஒருங்கிணைத்தார்.
தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர் மா. வேழ வேந்தன், மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர் இராவணன், தோழர்கள் சிகாமணி, அசோக், சுரேந்தர் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக, தோழர்கள் ஷர்மிளா, குடிஅரசு (மாவட்ட அமைப்பாளர்) ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் தோழர் பேரறிவாளன் பங்கேற்றார்.
பெரியார் முழக்கம் இதழ் 03092026
