மாநாட்டிலிருந்து சில துளிகள்…

★ மாநாட்டுத் திடலில் சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் குறித்த வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய பதாகைகள் இடம் பெற்றிருந்தன.

★ மாநாட்டில் பார்வையாளர்களிடம் துண்டு ஏந்தி திரட்டப்பட்ட ரூ.7420 நிதி, மயிலாடுதுறை மாவட்டக் கழகம் சார்பாக ரூ.5,000, மதுரை மாவட்டக் கழகம் சார்பாக ரூ.15,000 கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்துக்கு வழங்கப்பட்டது.

★ நாமக்கல் மாவட்டக் கழகம் சார்பாக தோழர்கள் ரூ.10,000 மாநாட்டுக்கு நன்கொடையாக வழங்கினர்.

★ மாநாட்டு முன்னேற்பாட்டுக் குழுவினரான அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன் மற்றும் தோழர்கள் பெரியார் நம்பி, குமரேசன் ஆகியோர் கழக ஆதரவாளர்களை சந்தித்து நன்கொடை திரட்டும் பணிகளை மேற்கொண்டனர்.

★ பரப்புரைப் பயணத்துக்கும், மாநாட்டுக்கும், மயிலாப்பூர் பகுதி கழகம் சார்பாக, ரூ. 5,000-அய் தோழர் மனோகர் நன்கொடையாக வழங்கினார்.

★ இந்த பரப்புரைப் பயணத் திட்டத்துக்கும், துண்டறிக்கை தயாரிப்பு, சீருடை தயாரிப்புக்கும் நிதி திரட்டி மாநாட்டு பணிகளுக்கும் முதுகெலும்பாக நின்று செயல்பட்டவர் தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன்.

★ வெளியீட்டுச் செயலாளர் கோபி.இராம இளங்கோவன் கோபி மாவட்டக் கழகம் சார்பில் மாநாட்டுக்கு ரூ.30,000 மற்றும் மாநாட்டு மேடைச் செலவுகளுக்கு ரூ.20,000 என்று மொத்தம் ரூ.50,000 நிதி வழங்கினார்.

★ ஆக-11, அன்று காரைக்குடி பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் இராமன் கழகத் தலைவர் மற்றும் மாநாட்டுக்கு பணியாற்றிய கழகத் தோழர்கள் 25 பேருக்கு இரவு அசைவ உணவை தனது பண்ணை இல்லத்தில் வழங்கினார்.

★ கழகத்தின் ஒவ்வொரு மாநாட்டிலும் ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த மாநாட்டிலும் சென்னிமலை வெங்கடேஷ்-லலிதா இணையர்களின் மகள் கீர்த்தனா அவர்களுக்கும் கழகத் தோழர் திருப்பூர் முத்துலெட்சுமி-ஆண்டவர் இணையர்களின் மகன் சக்தி, ஆகியோருக்கும் ஜாதி மறுப்புத் திருமணம் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. தோழர் முத்துலெட்சுமி தன்னுடைய 2 மகன், 3 மகள் ஆகியோருக்கு ஜாதிமறுப்புத் திருமணங்களை செய்து வைத்தவர். திருச்சியில் நடந்த கருஞ்சட்டை மாநாட்டிலும் இதே போல் தனது குடும்பத்தின் ஜாதிமறுப்புத் திருமணங்களை எளிமையாக நடத்தி வழிகாட்டி வருகிறார்.

★ பயணக்குழுவினர் மாநாட்டு நோக்கத்தை அச்சிட்ட கருப்பு டி-சட்டைகளை அணிந்து வந்தனர். அவர்கள் படைவீரர்களாக காட்சி அளித்தனர்.

★ கழகத் தோழர்கள் பெரியார் முத்து, இளங்கோவன், ரமேஷ், முத்துக்குமார், சரவணன், பாலச்சந்தர், வினோத் ராஜா, திருநாவுக்கரசு, தவச்செல்வம், பெரியார் நம்பி, குமரேசன், மணிமாறன் (தமிழக மக்கள் முண்ணனி), ஆகியோர் தோரணம் கட்டுதல், கடைவீதி வசூல் உள்ளிட்ட மாநாட்டுப் பணிகளுக்கு இரவு பகல் பாராது உழைத்து மாநாட்டின் வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.

★ சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் அருண், மயிலை குமார், எழிலரசன், இளவரசன், பிரபாகரன், பிரசாந்த் மற்றும் அன்னூர் விஷ்ணு ஆகியோர் மூன்று நாட்களுக்கு முன்பே சென்று கடும் உழைப்பை வழங்கி மேடை வடிவமைப்புப் பணிகளை செய்து முடித்தனர். மாநாட்டு ’லோகோ’வுடன் இவர்கள் அமைத்திருந்த அழகிய செல்ஃபி பீடத்தில் ஏராளமான தோழர்கள் படம் எடுத்து மகிழ்ந்தனர்.
– நமது செய்தியாளர்.
பெரியார் முழக்கம் இதழ் 20082026

You may also like...