சலசலப்புகளை முறியடித்து பயணம் தொடர்கிறது

திருச்சி அணி:
துவக்க பொதுக்கூட்டம் திருச்சி மேலப்புலிவார்டு பகுதியில் ஆக-6 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பயணக்குழு தலைவர் உமாபதியிடம் கழகக் கொடியைத் தந்து பயணத்தைத் துவக்கி வைத்தார்.

டார்வின் தாசன் தலைமை தாங்கினார். பெரியார் விருதாளர் தி.நெடுஞ்செழியன், தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன் ஆகியோர் கருத்துரையாற்றினர். சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மற்றும் லதா சத்யா குழுவினரின் பகுத்தறிவுப் பாடல்களை பாடினர். தலைமைக்குழு உறுப்பினர் திருச்சி மனோகரன் பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். கழகத் தோழர்கள் மணிகண்டன், குணா உள்ளிட்ட தோழர்கள் உடனிருந்து உதவினர்.

2-ம் நாள்: திருச்சி புறநகர் அண்ணா நகர் 3வது பேருந்து நிலையம், MIET குண்டூர், சோமரசம்பேட்டை, அல்லித்துறை ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட்-7, அன்று பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், கருப்பு கோகுல் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

மூன்றாம்நாள்: லால்குடி, அரியலூர் பேருந்து நிலையம், ஆர்.எஸ் மாத்தூர் ஆகிய இடங்களில் ஆகஸ்ட்-8 அன்று பிரச்சாரம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. திமுக மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஸ்டான்லி, திமுக மாவட்டத் துணை அமைப்பாளர் ஓரம்போ சுரேஷ் ஆகியோர் பரப்புரை பயணம் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை. தாமோதரன் கருத்துரையாற்றினார். பாரி சிவா கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை. தாமோதரன் நடத்திய “மந்திரமா? தந்திரமா?” நிகழ்ச்சி, திரண்டிருந்த மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

திமுக ஒன்றியச் செயலாளர் எழில்மாறன், திருச்சி பயணக்குழு தோழர்களுக்கு ஆடை போர்த்தி வரவேற்றதுடன், உணவு மற்றும் தங்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். எழில்மாறனுக்கு கழகப் பொதுச்செயலாளர் எழுதிய ‘ஆரிய மாடலா?திராவிட மாடலா’ நூல் வழங்கப்பட்டது.

தலைமைக் குழு உறுப்பினர் இளையராஜா, இராவணன், ஆ.வ. வேலு, சுகுமார், ஏசுகுமார், சு. கோபிநாத், த.நா. சூர்யா, இரண்யா, கடலூர் சிவா, மயிலை அருண், அசோக், வீரா, ரஞ்சித் ஆகியோர் கலந்துகொண்டனர். பரப்புரைக் கூட்டத்திற்கு பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டிருந்தனர். எழுச்சியுடன் கூட்டம் நடைபெற்றது.

பேராவூரணி அணி

ஆக-6, பயண துவக்க பொதுக்கூட்டம் போராவூரணியில் தலைமைக்குழு உறுப்பினர் திருவேங்கடம் தலைமையில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. நகரச் செயலாளர் கலைசெல்வன் வரவேற்புரையாற்றினார். தோழர்கள் கோபி வேலுச்சாமி, முகில்ராசு ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிறப்புரையாற்றினார்.

இரண்டாவது நாள்: காலை 9 மணிக்கு உடையநாடு கிராமம், மாலை 4 மணிக்கு மல்லிப்பட்டினம், மாலை 6 மணிக்கு அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் பரப்புரை நடைபெற்றது. தோழர்கள் திருவேங்கடம், கவிமணி ஆகியோர் தலைமை தாங்கினர். கிருஷ்ணன் அவர்கள் பாடலுடன் தொடங்கியது.

பரிமளராஜன், மதத்தில் பார்ப்பனியம் என்ற தலைப்பில் அய்யனார் (தலைமைக்குழு உறுப்பினர்) ஜாதியில் திருமணம் தலைப்பில் கலைச்செல்வன், நிர்மல்குமார் (தலைமைக்குழு உறுப்பினர்), வாழ்வில் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் கோபி.வேலுச்சாமி ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக கழகப் பொருளாளர் துரைசாமி சிறப்புரையாற்றினார். தோழர் கவிமணி நன்றி கூறினார்.

வணிகர்களும், பொதுமக்களும் பரப்புரைக்கு ஆதரவு தெரிவித்து மகிழ்ச்சியுடன் நன்கொடை கொடுத்தனர். திமுக பொறுப்பாளர்கள் கழகப் பொருளாளர் துரைசாமி, தலைமைக்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் திருவேங்கடம் ஆகியோருக்கு ஆடை அணிவித்தனர். பயணக்குழு தோழர்களுக்கு தேநீர் வழங்கி ஆதரவு தெரிவித்தனர். பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த திருப்பூர் வியாபாரிகள் சிறுகுறு வியாபாரிகள் பரப்புரைப் பயணத்துக்கு நன்கொடை வழங்கினர். பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் பேசிய கருத்துகளை கவனித்து விட்டு ரூ.500 ஒருவரும் மற்றொருவர் ரூ.1000 வழங்கினர். கழகப் பரப்புரைப் பயணத்தை ஆதரித்த நாம் தமிழர் கட்சியில் முன்பு பணியாற்றிய சைபுதீன் அனைவருக்கும் தேநீர் வாங்கிக் கொடுத்தார். மேலும் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு எதிராக சீமான் பேசியபோது அதை கீழே இருந்து எதிர்த்தவன் நான். கொள்கை இல்லாமல் பயணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டேன் என்றார். பரப்புரைப் பயணம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் தெரிவித்தார். இரவு உணவையும் தங்கும் இடத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

மூன்றாம் நாள்: துவரங்குறிச்சி, உள்ளிக்கோட்டை, மன்னார்குடி ஆகிய பகுதிகளில் ஆக-8 அன்று பரப்புரை நடைபெற்றது. தோழர் பாரி, திருவேங்கடம் (தலைமைக் குழு உறுப்பினர்) ஆகியோர் தலைமை தாங்கினர்.

`தடை அதை உடை’ கழகப் பரப்புரைப் பயணப் பாடல் மற்றும் தோழர்கள் வீரமணி, கிருஷ்ணனின் பகுத்தறிவு பாடல்களுடன் தொடங்கியது. மாரி, முகில்ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்), நிர்மல்குமார் (தலைமைக்குழு உறுப்பினர்), ஜாதியில் திருமணம் என்ற தலைப்பில் கலைச்செல்வன், திருப்பூர் முத்து, நிறைவாக கோபி வேலுச்சாமி, சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர் குணா ஏன் இந்த பரப்புரைப் பயணம் என்பதைக் கேள்வி பதில் பாணியில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

துவரங்குறிச்சியில் தோழர்கள் பேசும்போது இடையில் சங்கிகள் இந்து மதத்திற்கு எதிராக பேசுகிறார்கள் இந்து மதத்தை ஒழிக்கப் பார்க்கிறார்கள் என்று கூச்சலிட்டனர். காவல்துறையின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் கூட்டம் நிறுத்தப்பட்டது.

மதிய உணவை கவிமணி ஏற்பாடு செய்திருந்தார். தோழர்கள் அனைவருக்கும் தங்கும் இடத்தையும் இரவு உணவையும் மறைந்த கொள்கையாளர் திமுக “மன்னை நாராயணசாமி” அவர்களின் பேரன் சோழராஜன்” ஏற்பாடு செய்தார்.

கடைவீதி வசூல் வழியாக ரூ. 8876 நிதி திரட்டினர். ரூ.590 ரூபாய்க்கு கழக வெளியீடுகள் விற்பனையானது. கடைவீதி வசூல் மற்றும் துண்டறிக்கை வழங்கும் பணியை செல்வராஜ் , மதுரை முருகேஷ் , கிருஷ்ணன் , கோபி வேலுச்சாமி, நல்லதம்பி, முகில்ராசு உள்ளிட்ட தோழர்கள் செய்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 13082026

You may also like...