நங்கவள்ளியில் கழகத் தோழர்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு!
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் நங்கவள்ளியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் நேரத்துக்குப் பள்ளி, கல்லூரிக்குச் செல்லவும், பள்ளி முடிந்த பின் பாதுகாப்பாக வீடு திரும்பவும் ஏதுவாக பேருந்து நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, சேலம் மாவட்டக் கழக ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் 20.07.2026 அன்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் மனு அளித்தனர்.
அமைச்சர், கழகத் தோழர்களின் கோரிக்கையை பரிசீலித்து இரண்டு நாளுக்குள் பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படும் என உறுதியளித்தார்.
பெரியார் முழக்கம் இதழ் 30072026
