பெரியார் முழக்கத்தின் சிறப்பான பதிவுகள்
பெரியார் முழக்கம் சிறப்பான செய்திகளை வெளியிட்டு வருகிறது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் “ஆண்மையும் வேண்டாம்; பெண்மையும் வேண்டாம்” என்ற தலைப்பில் தொகுத்துத் தந்த பெரியார் சிந்தனைகள்; “கட்சி மாறினால் பதவி; ஜாதி மாறினால் மரணமா? என்ற முகநூல் பதிவு; “சேலம் பல்கலைக்கழக துணைவேந்தராக பட்டியல் சமூகத்தினரை நியமக்க வேண்டும் என்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை; உயிரற்ற பொருளிலிருந்து உயிரை உண்டாக்கி கடவுள் சக்தியை விடைபெற வைத்த செய்தி, `பாஜகவின் சூழ்ச்சிகர அரசியல்’ தலையங்கம்; நூறுசாமி திரைபடம் உருவாகக் காரணமாக இருந்த பெரியார் சிந்தனை என்ற செய்தி அனைத்தும் மிகச்சிறப்பு.
மு.சாமிநாதன் (குமாரபாளையம்)
நாமக்கல் மாவட்டத் தலைவர்
பெரியார் முழக்கம் இதழ் 30072026
