பாலியல் படுகொலை: சிறுமியின் குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் ஆறுதல்

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம்,கொளத்தூர் உக்கம்பருத்திக்காடு பகுதியில் உள்ள சிறுமியின் இல்லத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி நேரில் சென்று சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், சேலம் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன், கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் விஜயக்குமார், கொளத்தூர் நகரச் செயலாளர் அறிவுச்செல்வன், ஆசிரியர் செல்வேந்திரன், சுரேஷ், ராஜா, அழகேஸ்வரி, அவினாசி, குமரன் நகர் பகுதித் தலைவர் தேவராஜ், கார்த்தி, அரவிந்த், பிரசாந்த், அமுதன், கணேஷ், அம்ஜித்கான், கோபிகிருஷ்ணன் கோபால், மணிரத்தினம், ப்ரீத்தி, ராஜேஸ்வரன், அம்முகுட்டி, செந்தமிழ் கலைஅமுதன் ஆகிய மேட்டூர், கொளத்தூர் பகுதி கழகத் தோழர்கள் கலந்துகொண்டு சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 29052026

You may also like...