சென்னிமலை செல்வராஜ் இணையர் முடிவெய்தினார்!
கழக ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் செல்வராஜ் அவர்களின் இணையர் பழனியம்மாள் (48) 17.05.2026 முடிவெய்தினார்.. அவர்களது இறுதி நிகழ்வு மாலை 7 மணியளவில் பெருந்துறை மின் மயானத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு பழனியம்மாள் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
மறைந்த தோழர் பழனியம்மாள் (48) அவர்களின் விருப்பப்படியும், அவரின் இணையர் செல்வராஜ் அவர்களின் விருப்பப்படியும் பழனியம்மாள் அவர்களின் உடல் கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க இசைவு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை மற்றும் பல்வேறு உடல் நல பிரச்சனைகள் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அன்னாரின் உடல் தானமாக பெறும் நிலையில் இல்லை என்று தெரிவித்துவிட்ட நிலையில் அவரது கண்கள் மட்டும் தானமாக வழங்கப்பட்டது.
கழகப் பொருளாளர் துரைசாமி, கழக மாநில அமைப்புச் செயலாளர் ப.ரத்தினசாமி, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராஜன், தலைமைக் கழகப் பேச்சாளர் காவை இளவரசன், ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, ஈரோடு மாவட்ட அமைப்பாளர் குமார், ஈரோடு மாவட்டப் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, கொடுமுடி பாண்டியன், திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து, சென்னிமலை ஒன்றியச் செயலாளர் ரவி, ஆசிரியர் சிவக்குமார், ராமன், சசி, மோகன்ராஜ், முத்துலட்சுமி, ஜோதி, திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், அவினாசி ஆகிய தோழர்கள் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.பெரியார் முழக்கம் இதழ் 21052026
