உலக மகளிர் தினத்தையொட்டி 9 நூல்கள் வெளியிடு

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு “மறுக்கப்படும் உரிமைகள், மறைக்கப்பட்ட வரலாறுகளைப் பேசும் .வானதியின் கவிதைகள், வழி, தியாகச்சுடர் அன்னை பூபதி, கஸ்தூரியின் ஆக்கங்கள், மார்ச்-8, அனைத்து உலக பெண்கள் நாள், கனவுக்கு வெளியேயான உலகு, பெண் விடுதலையும் விடுதலைப்புலிகளும், பெண்களும் புரட்சியும், வேர்கள் துளிர்க்கும், காதோடு சொல்லி எழு ஆகிய 9 நூல்கள் வெளியிடப்பட்டன. வெளியீட்டு விழா 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் சென்னை, வடபழனி திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தில் ம. டேவிட் பெரியார் தலைமையில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பௌமிகா வரவேற்புரையாற்றினார். இனியாழ், ஆண்டனி ராஜ் (அ. தி. மு. க), அன்பு தனசேகர் (தலைமைக்குழு உறுப்பினர் திவிக), லாரன்ஸ் பிரபாகரன் (தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்), வள்ளலார் நகர் தினகரன், அ. சி. சின்னப்பத்தமிழர் (தமிழ் வழிக்கல்வி இயக்கம்), M. K பிரபாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேவி இயக்கத்தில் “எங்களின் குரல்” நாடகம் அரங்கேற்றப்பட்டது. புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் பதிப்புரையாற்றினார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இறை. அங்கயற்கண்ணி, துளசிமணி சக்திவேல் (ம. தி. மு. க அரச்சலூர் பேரூராட்சி துணைத் தலைவர்), எழுத்தாளர் அர்ஷா, வழக்குரைஞர் தமயந்தி, பெரியார் சாக்ரடீஸ் (பெரியாரியச் செயல்பாட்டாளர்), எழுத்தாளர் தங்கலட்சுமி சுப்பிரமணியன், மகாலட்சுமி (வழக்குரைஞர் பெண்கள் எழுச்சி இயக்கம்), செந்தில் (த. தே. ம. மு ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் நூல்கள் பற்றி கருத்துரையாற்றினர். செல்வி (மனிதி ஒருங்கிணைப்பாளர்) நோக்கவுரையாற்றினார். திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் மதிப்புரையாற்றினார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். பேராசிரியர் சரஸ்வதி, தியாகு (த. தே. வி. இ.பொதுச்செயலாளர்), மல்லை சத்யா (தி. வெ. க தலைமை ஒருங்கிணைப்பாளர்), வ.ரமணி (மாநிலச் செயலாளர் சாதி ஒழிப்பு முண்ணனி), அஜிதா (வழக்குரைஞர் சென்னை உயர்நீதி மன்றம்) ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். வழக்கறிஞர் சாரநாத் (ம.இ.எ.ப.விசிக), கார்த்தி, செ. கரிகால்வளவன், தபசி குமரன் ( தலைமை நிலையச் செயலாளர்), இரா. உமாபதி (மாவட்டச் செயலாளர்), திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் வ.கருப்பண் (Skyaura Studios), U2Brutus மைனர், இராவணன் (மா.துணை செயலாளர்), மஞ்சு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். சுதா காந்தி, ரமணி, செல்வி, ஆகியோர் நிழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்.
பிரகாஷ் (மாஸ்டர்), மோகன், பரதன், ஜேம்ஸ், காஞ்சிபுரம் ரவி பாரதி, லட்சுமணன், ஊடகவியலாளர்கள் தினேஷ், லீலாவதி மற்றும் எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தோழர் அருண் தேநீர் மற்றும் சிறுதானிய உணவுகளை வழங்கினார். தோழர் ரியாஸ்கான் படங்கள் மற்றும் காணொளி பணிகளை செய்து கொடுத்தார்.

பெரியார் முழக்கம் இதழ் 23042026

You may also like...