தமிழ்ஈழம் – தினேஷ் குமார் இணையேற்பு விழா!

தோழர் அறக்கட்டளை நிறுவனர் சாந்தகுமார் – லதா ஆகியோரின் மகள் தமிழ்ஈழம் அவர்களுக்கும் மதுரையைச் சேர்ந்த தினேஷ்குமார் அவர்களுக்கும் வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழா 22.02.2025 ஞாயிறு அன்று மாலை 6 மணி அளவில் கோவை நல்லாம்பாளையம் பொன்மணி திருமண மண்டத்தில் நடைபெற்றது. புதிய குரல் நிறுவனர் ஓவியா தலைமை வகித்து வாழ்த்துரையாற்றினார்.

பொள்ளாச்சி உமாபதி (மாநிலச் செயலாளர், தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை), ஆறுச்சாமி (த.பெ.தி.க தலைமை நிலையச் செயலாளர்), மயூரா தாமோதரசாமி (கல்வியாளர்), முனைவர் தமிழரசி, முகம்மது ஜியாவுதின் (நீதிபதி, மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையம் தமிழ்நாடு அரசு), மோகனசுந்தரம் (ராகவேந்திரா சேவா டிரஸ்ட்), திருப்பூர் தமிழ்ச்செல்வி (கருணா மனோகரன் அறக்கட்டளை), அசோக்குமார் (அறிவுச்சோலை அறக்கட்டளை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன் மணமக்களுக்கு வாழ்க்கை துணைநல ஒப்பந்தம் செய்து வைத்து வாழ்த்துரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த. பெ. தி. க தலைமை நிலைய செயலாளர் ஆறுச்சாமி, புலவர் செந்தலை ந. கௌதமன் (சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனர், தமிழ் இணையக் கல்விக்கழக நெறியாளர்), பேரறிவாளன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

நிகழ்ச்சியில் புலவர் செந்தலை ந. கௌதமன் “இந்தியாவில் வடக்கின் அதிகாரம்” என்ற நூலை வெளியிட்டார். நூலை மணமக்கள், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு. இராமகிருஷ்ணன், த.பெ.தி.க தலைமை நிலையச் செயலாளர் ஆறுச்சாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிறைவாக தோழர் அறக்கட்டளை நிறுவனர் சாந்தகுமார் நன்றியுரையாற்றினார்.
கழகப் பொருளாளர் துரைசாமி, தலைமைக்குழு உறுப்பினர் ரத்தினசாமி, திருப்பூர், கோவை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், த.பெ.தி.க, தி.மு.க, மற்றும் இடதுசாரி அமைப்புத் தோழர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

பெரியார் முழக்கம் இதழ் 23042026

You may also like...