பெயர் சூட்டு விழா!
கழகத் தோழர் அருண்பாண்டியன்-குமுதா ஆகியோரின் ஆண் குழந்தைக்கு 05.04.2026 ஞாயிற்றுக்கிழமை சேலம் குரங்குச்சாவடி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பெயர் சூட்டும் விழா நடைபெற்றது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அருண்பாண்டியன் – அமுதா ஆகியோரின் ஆண் குழந்தைக்கு “தமிழ்சமரன்” என பெயர் சூட்டி மகிழ்ந்தார். பிறந்தநாள் மகிழ்வாக ரூ.2000 பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக தந்துள்ளனர்.
சக்திவேல்( கிழக்கு மாவட்டத் தலைவர்), டேவிட் (கிழக்கு மாவட்டச் செயலாளர்), கிருஷ்ணன் ( மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), மாவட்ட அமைப்பாளர்கள் அன்பு, பெருமாள், தேவபிரகாஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்), பிரபாகரன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), தங்கதுரை (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), தேவராஜ் (சேலம் மாநகர அமைப்பாளர்), ராஜேந்திரன் (நங்கவள்ளி ஒன்றிய அமைப்பாளர்), கார்த்தி (ஏற்காடு ஒன்றியப் பொறுப்பாளர்), பிரபு (சேலம் மாநகர பொருளாளர்), லோகநாதன், அவினாசி, செய்தியாளர் கோகுல், தீபா, யாழினி, முத்துராஜ், இந்திராணி, ஈழ பிரபாகரன், ஆனந்த், கார்த்திகேயன், முரளி ஆகிய தோழர்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 30042026
