சாதனையாளர்களுக்கு விருது கோபி ஒன்றியக் கழகத்தின் எழுச்சி விழா
கோபி ஒன்றியம் அளுக்குளி கிளைக் கழகத்தின் சார்பில் சாதனையாளர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் ஜாதி மறுப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கும் விழா கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி, மாவட்டச் செயலாளர் செல்வகுமார், திமு கழகப் பொறுப்பாளர் அளுக்குளி தங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஒ.பி.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இராம. இளங்கோவன் வெளியீட்டு செயலாளர் திவிக, வழக்குரைஞர் செகதீஸ்வரன், வேலுச்சாமி தலைமைக் கழகப் பேச்சாளர் திவிக, சுப்பிரமணியம் கொளப்பலூர் கிளை கழகப் பொறுப்பாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஜாதி மறுப்பு மணம் புரிந்தவர்களுக்கும் மற்றும் கல்வி, அரசுப் பணி, விளையாட்டு துறைகளில் பல்வேறு சாதனைகள் புரிந்த இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கழகத்தலைவர் கொளத்தூர் மணி, கோபி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஏ முருகன் ஆகியோர் நினைவுப்பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்வில் கோபி மாவட்டக் கழகத் தோழர்கள் மற்றும் அளுக்குளிப் பகுதி கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை அளுக்குளி பகுதித் தோழர்கள் செய்திருந்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 03092026
