ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி முருகேசன் நினைவேந்தல் நிகழ்வு!

ஜாதி ஒழிப்பு – சமூக நீதி விடுதலைக் களத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஓய்வறியாமல் போராடிய ஒப்பற்ற போராளி, ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் தோழர் சு. முருகேசன் அவர்களின் மறைவையொட்டி நினைவேந்தல் கூட்டம் மற்றும், படத்திறப்பு நிகழ்வு ஆக-1, வல்லக்குண்டாபுரத்தில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டக் கழகம் சார்பாக மாவட்டத் தலைவர் முகில் ராசு கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தி, இரங்கல் உரையாற்றினார். நிகழ்வில் திருப்பூர் குணா பங்கேற்றார்.
பெரியார் முழக்கம் இதழ் 13082026

You may also like...