கடலூரில் கழகத் தலைவர் பேச்சு பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்ற விடக்கூடாது
கடலூர்: மாவட்டக் கழகத்தின் சார்பில் 28.03.2026 சனிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் கடலூர் மஞ்சகுப்பம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை அருகில் கடலூர் பெரியார் சிவா தலைமையில் பொதுகூட்டம் நடைப்பெற்றது.
கடலூர் ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். அறிவழகன் முன்னிலை வகித்தார். பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் ‘‘தகைசால் தமிழர்’’ தோழர் நல்லகண்ணு மற்றும் திராவிட இயக்கத் தலைவரும், சமூக சீர்திருத்தவாதியுமான அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி ஆகியோரின் படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி. மு. க தேர்தல் பணிக்குழு செயலாளர் வழக்கறிஞர் இள. புகழேந்தி அவர்களும் படத்தை திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினர். உமாபதி, லதா, சத்யா, திராவிட மகிழன் கலைக்குழு ஆகியோரின் அரசியல் நையாண்டி மற்றும் கலைநிகழச்சி நடைபெற்றது.
லோகு. அய்யப்பன் (திராவிடர் விடுகலைக் கழக புதுச்சேரி மாநில தலைவர்), இரா. உமாபதி (தலைமைக் குழு உறுப்பினர்), கே. எஸ். ராஜா (தி. மு. க கடலூர் மாநகர கழக செயலாளர்) , து. பாலு (மக்கள் அதிகாரம், செயற்குழு உறுப்பினர்), தே. கலை மோகன் (வி. சி. க கடலூர் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர்), புதுவை தீனா (பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர்), எழிலேந்தி (தி. க கடலூர் மாவட்ட செயலாளர்), மு. பெரியாண்டவர் (வி. சி. க தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் பணியாளர் பேரவை மாநில பொதுச்செயலாளர்) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
(முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி. மு. க தேர்தல் பணிக்குழு செயலாளர் வழக்கறிஞர் இள. புகழேந்தி), (தி. மு. க புதுச்சேரி மாநில மகளிர் அணி அமைப்பாளர் தி. மு. க காயத்ரி ரீகாந்த்), (வி. சி. க மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் தி. ச. திருமார்பன்), தே. கலை மோகன் (வி. சி. க கடலூர் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் ) ஆகியோர் கருத்துரையாற்றினர்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் ஜாதிவெறி, வர்ணவெறி பேசுகிற- நமக்கு எதிரானதை, நம்மை இழிவுப்படுத்துவதை நம்மிடம் புகுத்துவதுதான் தன் கொள்கையாக வைத்துக்கொண்டிருக்கிற `பா.ஜ.க’ அரசு இங்கு வந்துவிடக்கூடாது. அவர்கள் ஆட்சி அதிகாரம் பெற்று விடக்கூடாது; மீண்டும் தமிழ்நாட்டில் “தி.மு.க” அரசு தொடர வேண்டும் என கோரிக்கையாக முன் வைத்து சிறப்புரையாற்றினார்.
கடலூர் மாவட்ட பொறுப்பாளர் சதீஷ் நன்றியுரையாற்றினார். (தி. மு. க தலைமைக் குழு உறுப்பினர் விக்ரமன்), (தி. மு. க மாநகர துணை செயலாளர் அகஸ்டின் பிரபாகரன்), (எஸ். டி. பி. அய் கட்சி கடலூர் நகரத் தலைவர் வஜ்ரத்துல்லா), (புதுச்சேரி தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பிரகாஷ்), (வி. சி. க கடலூர் ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் கமல்), (மக்கள் பாடகர் சேரி குயில் சேட்டு), (புரட்சிகர மாணவர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் தோழர் புஷ்பராஜ்), (கடலூர் மாவட்ட கழகத் தோழர்கள் அரசு, திருமூர்த்தி, சுகுமார, கடலூர், சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் அருண் (இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்), குமார், அசோக், வீரா மற்றும் வி.சி.க, எஸ்.டி.பி.அய், புதுச்சேரி தி.வி.க மற்றும் கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 09042026
