சுயமரியாதை இயக்க சாதனை: குடியாத்தத்தில் கழகத் தலைவர் பேச்சு:
வேலூர் மாவட்டக் கழகம் சார்பில் குடியாத்தம் ஒன்றியத்தில் 08.08.2025 அன்று பரதராமி பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்ட நிகழ்விற்கு கழக குடியாத்தம் ஒன்றியச் செயலாளர் அ.அமல்ராஜ் தலைமையேற்றார்.
மோ. வை. யாழினி வரவேற்புரை -யாற்றினார். மதுரை சித்திரை சேனன், தெரு விளக்கு கோபிநாத் பெரியார், பகுத்தறிவுப் பாடல்கள் பாடினார்கள். நாடக கலைஞர் ச. பார்த்திபன் குழுவினர் பறைஇசை வாசித்தனர். சிறப்பு நிகழ்வாக ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தோழர்கள். விமல் – ரேணுகோபால், தீபலட்சுமி – பாஸ்கரன், நந்தாதேவி – முரளி, மீனா – வேல் ராஜ்குமார் திருமணம் செய்து கொண்ட தோழர்கள் மற்றும் விதவை மறுமணம் செய்து கொண்ட தோழர்கள் ஷாலினி – சுரேஷ் குமார் ஆகியோரை கழகத் தலைவர் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார். கலை இலக்கிய பேரவை மாநில துணைச் செயலாளர் திமுக, நிறுவனர் முரசொலி தமிழ் மன்றம் திரு.கெம்மாங்குப்பம், சி. கோபி மற்றும் நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்கள்.
மோ.வை.கயல்விழி நன்றியுரை ஆற்றினார். திலீபன் (வேலூர் மாவட்ட தலைவர்), சிவா (மாவட்டச் செயலாளர்), சதீஷ் குமார் (மாவட்ட பொருளாளர்), சுரேஷ் (மாவட்ட அமைப்பாளர்), தெருவிளக்கு கோபிநாத் (வேலூர் மாவட்ட அறிவியல் மன்ற தலைவர்), ரேணு (வேலூர் மாவட்ட அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர்), அன்பு (தமிழ்நாடு மாணவர் மன்ற மாவட்ட பொருளாளர்), சதீஷ் (பெரியார் வாசகர் வட்டம் ), வழக்கறிஞர் பாலகுமரன், வழக்கறிஞர் மருதன் மற்றும் கழகத் தோழர்கள், பொதுமக்கள் தோழமை அரசியல் கட்சியினர், தோழர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார்முழக்கம்இதழ்14082025
