திருப்பூரில் கலந்துரையாடல் கூட்டம்
மாநகர ஆலோசனைக் கூட்டம் 09-07-2025 மாலை 5 மணி அளவில் ஆத்துப்பாளையம் மதன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. தலைமை: மதன் முன்னிலை, முத்து. தீர்மானங்கள்:
விநாயகர் சதூர்த்தி என்ற பெயரில் நீர் நிலைகளில் இரசாயன பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலை கரைப்பதை தடுத்து தலைமைக் கழக வழி காட்டுதலின் படி மாவட்ட ஆட்சியர், மாசுகட்டுப்பாட்டு வாரியம், அறநிலையத் துறை, காவல் ஆணையாளர் அலுவலம் ஆகிய அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி நேரில் மற்றும், பதிவு தபால் மூலம் புகார் விண்ணப்பம் வழங்குவது.
கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை கூட்டம் நடத்துவது.
பெரியார் முழக்க வளர்ச்சி நிதி வழங்குதல் கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் பிறந்தநாள் விழா பொது கூட்டம் 15 வேலம்பாளையம் பகுதியில் நடத்துவது மற்றும் தோழர் மலரவன் அவர்களின் படத்திறப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு கழகத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரை அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்வில் சு.துரைசாமி மாநில பொருளாளர், வீ.சிவகாமி தலைவர் தமிழ்நாடு அறிவியல் மன்றம், முகில் இராசு மாவட்டத் தலைவர், தனபால் மாநகர தலைவர், மாரிமுத்து மாநகர துணைத் தலைவர் இராமசாமி தெற்குப் பகுதி கழகச் செயலாளர், முத்து மாநகர அமைப்பாளர் திவிக, சரசுவதி மாநகர அமைப்பாளர் திவிக அய்யப்பன் வடக்கு ஒன்றிய அமைப்பாளர், கனல்மதி மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர், தோழர்கள் இராசசிங்கம் மோகன் அம்மாபாளையம், சிரிஜா, வெங்கட், யாழிசை பெரியார் பிஞ்சு தழல் சிறகன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்க்களை வழங்கினர்.
பெரியார் முழக்கம் 17072025இதழ்
