“நியூட்ரினோ” திட்டத்திற்கு எதிராக போராடும் தோழர் முகிலன் கைதிற்கு கண்டனம்

தென் தமிழகத்தின் பாதுகாப்பிற்கே பேரபாயத்தை உருவாக்கும் “நியூட்ரினோ” திட்டத்திற்கு எதிராக பல்வேறு அடக்கு முறைகளை சந்தித்து களத்தில் போராடும் தோழர் முகிலன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் தனது ஆதரவினை தெரிவிக்கிறது.

தோழர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடில்லாமல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதை கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

தென் தமிழகத்தை அழிக்கும் திட்டமான நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்கும் திட்டத்தை மறைமுக ஆதரவு கொடுத்த அமைச்சர் திரு.ஒ.பன்னீர் செல்வம் அவர்களை இந்த தேர்தலில் தோற்கடிப்போம். நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்காத கட்சிகளை தோற்கடிப்போம் என்ற வேலைத் திட்டத்தோடு 08.05.2016 தேனி மற்றும் போடி பகுதிகளில் பரப்புரை இயக்கத்தை துவங்கினார் தோழர் முகிலன். இயற்கை வள பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் காலை தேனி கிருஷ்ணா திரையரங்கம் முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்புடன் பரப்புரை துவங்கியது.

பரப்புரையின் தொடர்ச்சியாக போடி பேருந்து நிலையத்தில் மதியம் 2 மணியளவில் துண்டறிக்கை பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கு வந்த காவல்துறை அத்துமீறி தோழர் முகிலன் அவர்களை கடுமையாக தாக்கியது. மேலும் பரப்புரையை முடக்கும் வகையில் தோழர் முகிலன், தோழர் மாவோ, நாணல் நண்பர்கள் இயக்க தோழர்கள் உட்பட அனைவரையும் வலுகட்டாயமாக கைது செய்து, பொய் வழக்கு போட்டு பின் விடுவித்தது.

இந்நிலையில் தன்னை தாக்கியவர்களையும் அவர்களை தூண்டிய ஓ.பன்னீர்செல்வத்தையும் கைது செய்ய வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் அவலகம் முன்பு உண்ணாநிலை போராட்டத்தில் இருந்தார் தோழர் முகிலன்

அவரிடம் எந்த விதமான முறையான பேச்சுவார்தையோ கோரிக்கைகளுக்கு பதிலோ அளிக்காமல் ஜனநாயக விரோதமாக செயல்பட்டுள்ள காவல் துறை வழக்கு பதிவு செய்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அவரை மதுரை சிறையில் அடைத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

13139138_1742870749330151_8243731579288276894_n 13220939_1742869479330278_352101154484750119_n 13221712_1742869302663629_5471418236856077989_n

You may also like...