ஜாதி வெறியர்களின் மீது 10 பிரிவுகளில் வழக்கு, செல்வன் இணையர் இளமதி இன்னும் மீட்கப்படவில்லை

கொளத்தூரில் ஜாதி வெறியர்களின் வன்முறை வெறியாட்ட சம்பவத்தின் மீதான நடவடிக்கைகள் !

சேலம் மாவட்டம் கொளத்தூரில்
09.03.2020 அன்று நடைபெற்ற
செல்வன் – இளமதி ஜாதி மறுப்பு திருமணத்தையொட்டி ஜாதி வெறியர்கள் நடத்திய கொலை வெறித்தாக்குதல், ஆள்கடத்தல்,கொள்ளை இவற்றின் மீதான காவல் துறையின் முதல் தகவல் அறிக்கைகள் 2. (இணைப்பு)

( 09.03.2020 அன்று கொளத்தூரில் நடந்தது என்ன ? அறிய :
https://www.facebook.com/1630392030578024/posts/2651540068463210/ )

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் கழகத்தோழர்கள் தாக்குதல் சம்பவம் நடந்த 09.03.2020 நள்ளிரவு முதல் அடுத்த நாள் காலை வரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராடியதன் விளைவாக

மனமகன் செல்வன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி,ஆள் கடத்தல்,கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளமதியின் தந்தை, பெரியப்பா, மாமா உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் மற்றும் கொலை முயற்சி,ஆள் கடத்தல்,கொள்ளை ஆகிய குற்றங்களுக்கான
மணமகன் செல்வன் கொடுத்த புகாருக்கு
கொளத்தூர் காவல் நிலைய குற்ற எண் 49/2020 ன் படி
SC/ST (R&A) Act 3 (1) R,S, 3(2) V
341,363,365,323,342,379,506(2)
பிரிவுகளிலும்

தோழர் காவலாண்டியூர் ஈஸ்வரன் கொடுத்த புகாருக்கு
கொளத்தூர் காவல் நிலைய குற்ற எண் 48/2020 ன்படி 147,448,323,365,342,379,506(2)
ஆகிய பிரிவுகளிலும்
வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதியளித்திருக்கிறது.

ஜாதி வெறி கும்பலால் கொடூரமான கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு உறுப்பினர் தோழர் காவலாண்டியூர் ஈஸ்வரன், மணமகன் செல்வன் ஆகியோர் மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஜாதி வெறியர்களால் கடத்தப்பட்ட
செல்வன் அவர்களின் மனைவி இளமதி இதுவரை (11.03.2020 – 7:20 pm) மீட்கப்படவில்லை.
அவர் இருக்கும் இடம் இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில்
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்
சென்னை,மதுரை,கோவை ஆகிய இடங்களில் இன்று 11.03.2020 மாலை,
இளமதியை உடனடியாக மீட்கவும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும்,
ஜாதி மறுப்பு திருமண இணையர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

– திராவிடர் விடுதலைக் கழக தலைமையகம்.
11.03.2020

You may also like...